கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் ஆட்சி புரிந்த குறுநில மன்னான அக்கிராசனுக்கு இன்று சிலை திறக்கப்பட்டது. கிளிநொச்சி அம்பலப்பெருமாள் சந்தியிலேயே இந்த சிலை திறக்கப்பட்டுள்ளது.
13ஆம் நூற்றாண்டில் அக்கராயன் பிரதேசத்தை அக்கிராசன் என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்துள்ளான். அவரது பெயரே இப் பிரதேசத்தின் பெயராக அக்கராயன் குளம் என்றும் அக்கராயன் பிரதேசம் என்றும் தற்போதும் அழைக்கப்படுகின்றது.