கிளிநொச்சி பரந்தன் பகுதியில் தனியார் வீடு ஒன்றிலிருந்து நேற்றிரவு புதையல் தேடும் கருவி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் யாழ். திருநெல்வேலியை சேர்ந்த இரண்டு பேரும், கிளிநொச்சி பளை பகுதியில் ஒருவரும், கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இருவருமாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகிறார்கள்