குரோசியா!!! தமிழ் ஈழத்துக்கு வழிகாட்டியாகுமா?

0

வடக்கு தெற்கு கிழக்கு ஐரோப்பாவை இணைக்கும் வாசற்கதவு. சாகிரேப் நகரைத் தலைநகராகக் கொண்டு இயங்கும் இந்த நாடு மலேசியாவை விட சிறிய நாடு. இந்த நாட்டின் மொத்த மக்கட்தொகையே 4 மில்லியன் தான். குரோட் இனமக்கள் அதிகமாக வசிக்கும் இந்த நாட்டில் சிறுபான்மையாக செர்ப், டச்சு என பல இனத்தவர்களும் வசிக்கின்றனர். அழகான நாடு.. எனக்கு மிகவும் பிடித்தமான நாடு. என்றாலும் இந்த நாடு மன்னராட்சி காலம் முதல் 1995 வரை பல போர்களைக் கண்ட நாடு.

யுகோசுலாவியா(SFRY).. அன்னை திரேசா பிறந்த நாடு. 1918இல் தொடங்கி 1941மவுனித்து மீண்டும் 1945இல் உருபெற்று 1993இல் போசுனியாவின் விடுதலைக்குப் பின் யுகோஸ்லாவியா இல்லாமல் போனது. குரோசியா, சுலோவேனியா, சுலோவாக்கியா, செர்பியா, போசுனியா, மாண்டினீக்ரோ என பல நாடுகள் இணைந்தது தான் இந்த யுகோஸ்லாவியா. இந்த நாட்டின் பெரும்பான்மையான செர்பியர்கள் தலைமையில் இயங்கிய சர்வாதிகார இராணுவத்திடமிருந்து முதலில் விடுதலைப் பெற்றது சுலோவேனியா. அதைத் தொடர்ந்து விடுதலைக்கு போராடி வென்றது குரோசியா.

1991 இல் சூன் மாதத்தில் குரோசியா இந்த யுகோஸ்லாவியா அரக்கனிடம் இருந்து விடுதலைப் பெற்றது. அதற்கு அவர்கள் விலையாய் கொடுத்தது பல்லாயிர இன்னுயிர்கள்.

*எங்கள் நாடு எங்கள் மக்கள் எங்கள் மொழி எல்லாம் வேறு..* *எங்களுக்குத் தேவை விடுதலை* என்று முழக்கத்தை வைத்தது குரோசியா..அதனை முடக்க செர்ப் இராணுவம் பல கோர தாண்டவம் ஆடியது. இரக்கமில்லாது மக்களை கொன்றது. பெண்களை வன்புணர்வு செய்தது, ஆண்களைக் கூட்டாகக் கொன்றது..குழந்தைகளைக் கொன்றது. இந்த பாவத்தில் மிகவும் கொடியது, செர்ப் இராணுவம் செய்த கேலி பாடல் ஒன்று..”ஏய் சுலோபோ.. சாலட்களை அனுப்பு.. இறைச்சிக்கு நாங்கள் தூயக் குரோசியர்களின் சதைகளை அறுக்கிறோம்” என்றது தான்.. எண்ணிப்பார்க்கவும் அந்த நாட்டின் வலியை.

எனினும் குரோசிய மக்களின் வீரியமும் இலக்கும் மாறவில்லை..பல உயிர்கள் போனாலும் தனி நாட்டு வேட்கையைக் கைவிடவில்லை.. பொதுவாக்கெடுப்பில் குரோசியாவுக்கு ஆதரவாக விழுந்த ஆதரவு வாக்குகள் 97% ஆகும்.. உலகில் இது வரை எந்த பொதுவாக்கெடுப்பிலும் இந்த அளவுக்கு ஆதரவு வாக்குகள் விழுந்ததில்லை.. ( *நாளை தனித்தமிழ் ஈழத்தின் பொதுவாக்கெடுப்பில் இந்தச் சரித்திரம் மீண்டும் இடம்பெறுமா* ? )

மிக அழகான நாடு..பல சரித்திரத்தைத் தன்னகத்தே கொண்ட நாடு, இன்று மீண்டும் ஒரு முறை வரலாறு படைத்துள்ளது.. முதல் முறையாக உலகக் கிண்ணப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது. அரை இறுதி ஆட்டம் முன் இங்கிலாந்து ஊடகங்கள் செய்த கேலிகளுக்குக் கசையடி கொடுத்து இறுதி ஆட்டத்துக்குச் சென்றது குரோசியா.

இதுவரை இப்படி ஒரு இருக்கிறது என்றே பலருக்குத் தெரியாது. ஆனால் 1998 முதல் இந்த நாள் வரை எல்லா உலகக் கிண்ணத்திலும் பங்கெடுத்துள்ளது குரோசியா. உலகுக்கு எங்கள் நாடு ஒன்று உள்ளதென காட்டியப் பெருமை லூக்கா மோட்ரிச்சுக்கும் குழுவின் நிர்வாகிக்குமே சாரும். அணியின் தலைவனாக மொட்ரிச், மொத்த அணியையும் ஊக்கப்படுத்தி ஊக்கப்படுத்தி இந்த நிலைக்கு கொண்டு வந்துள்ளார்.

லூக்கா மோட்ரிச் தனது 12வது வயதில் சுதந்திர குரோசிய நாட்டு போராட்டத்தில் கலந்து கொண்டவர். தனது தாத்தா தன் கண்முன்னே சுட்டுக்கொல்லப்பட்டத்தைக் கண்டவர்.குரோசியா நாட்டவர் எல்லோர் இரத்தத்திலும் அந்த சுதந்திரத்தின் மேன்மை குன்றவில்லை என்பதற்கு மொட்ரிச் ஓர் எடுத்துக்காட்டு.

இத்தகைய வரலாற்றைச் சுமந்து நிற்கும் குரோசியா உலகக்கோப்பைக் கால்பந்தாட்டத்தில் இறுதிவரை பயணித்தது ஒரு மாபெரும் வரலாறுதான் வாழ்த்துக்கள் குரோசியா!!!

*small_country_with_big_dreams*
?? ?? ?? ?? ?? ?? ?? ??

Leave A Reply

Your email address will not be published.