கொழும்பு டெஸ்டில் சதம் அடித்து 25 வருட கால சாதனையை சமன் செய்தார் டி ப்ரூயின்

0

கொழும்பில் நடைபெற்ற 2-வது டெஸ்டின் 2-வது இன்னிங்சில் சதம் அடித்து 25 வருட சாதனையை சமன் செய்துள்ளார் டி ப்ரூயின். #SLvSA

கொழும்பு டெஸ்டில் சதம் அடித்து 25 வருட கால சாதனையை சமன் செய்தார் டி ப்ரூயின்
இலங்கை – தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டெஸ்ட் கொழும்பில் நடைபெற்றது. இதில் இலங்கை அணி 199 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் களம் இறங்கிய இலங்கை 338 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய தென்ஆப்பிரிக்கா 124 ரன்னில் சுருண்டது. 2-வது இன்னிங்சில் இலங்கை 275 ரன்கள் சேர்த்து டிக்ளேர் செய்தது.

இதனால் தென்ஆப்பிரிக்கா அணிக்கு 490 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை. கடினமாக இலக்குடன் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்கா விரைவாக 5 விக்கெட்டுக்களை இழந்தது. 6-வது விக்கெட்டுக்கு டி ப்ரூயின் உடன் பவுமா ஜோடி சேர்ந்தார்.

இந்த ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது பவுமா 63 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் டி ப்ரூயின் சிறப்பாக விளையாடி 101 ரன்கள் அடித்தார். இதன்மூலம் ஆசியக் கண்டத்தில் 4-வது இன்னிங்சில் சதம் அடித்த 2-வது தென்ஆப்பிரிக்கா வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இதற்கு முன் ஒரு டெஸ்டின் கடைசி இன்னிங்சில், அதாவது நான்காவது இன்னிங்சில் 1993-ம் ஆண்டு இலங்கைக்கு எதிராக 101 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதன்பின் தற்போது 28 வருடத்திற்குப் பிறகு ப்ரூயின் சதம் அடித்துள்ளார். 2004-ல் ஸ்மித் 74 ரன்களும், தற்போது பவுமா 63 ரன்களும் அடித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.