சிறுமியை பாலியல் பலாத்காரம் 17 பேர்! அறுத்தெறியுங்கள் – நடிகர் பார்த்திபன் காட்டம்

0

சென்னையில் 11 வயது சிறுமியை 17 பேரால் பாலியல் பலாத்காரம் செய்ப்பட்டுள்ள குற்றத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகர் பார்த்திபன், அறுத்தெறியுங்கள் என்று கோபத்துடன் தெரிவித்துள்ளார். #ChennaiGirlHarassment #Parthiban

சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 11 வயது சிறுமியை கற்பழித்த குற்றத்திற்காக 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர். போதை மருந்து கொடுத்து கடந்த ஜனவரி மாதம் முதல் ஒருவர் மாற்றி ஒருவர் கற்பழித்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த குற்றத்திற்கு தமிழகம் முழுவதும் கடும் கண்டங்கள் எழுந்துள்ள நிலையில், நடிகரும், இயக்குநருமான பார்த்திபனும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பார்த்திபன் அறுத்தெறியுங்கள் என்ற தலைப்பில் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது,

இந்த நிமிடம்
இதே மணிக்கு
இங்கோ அங்கோ எங்கோ
ஒரு பாலியல் வன் கொடுமை
நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது…
அதுவும் தொலைக்காட்சியில் இன்றைய
நிகழ்வை பார்த்தபடி!!!
அதை தடுப்பது எப்படி?
ஏனெனில்,
போன வாரம்
போன மாதம்
போன வருடம்
வேறு ஒரு சிறுமியின் உறைந்த
ரத்தத்தின் மீது ஈனஸ்வரத்தில் நம் துயர்,
ஈக்களாய் மொய்த்துக்
கொண்டிருக்கையில்
இந்த 17-ம், இன்னும் சில மிருகங்களும்
செவி திறனற்ற ஒரு சங்கு புஷ்பத்தினை
பிய்த்தெறிந்து கொண்டிருந்தனர்.
எனவே நம் கண்களையும், காதுகளையும்
கூர்மையாக்கி, ____-க்கு அலையும்
மனுஷ ப்ராணிகளை கண்டறிந்து
காயடிக்க வேண்டும்!

என்று குறிப்பிட்டிருக்கிறார். #ChennaiGirlHarassment #Parthiban

Leave A Reply

Your email address will not be published.