சீனாவின் தந்திர வலைக்குள் மாட்டிக் கொண்டோம்! மனம் திறந்தார் ரணில்

0

எதிர்காலத்தில் நீர்மூழ்கி கப்பல்களால் ஏற்படக் கூடிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கான கவனத்தை செலுத்துமாறு அரசாங்கம், கடற்படைக்கு அறிவுறுத்த உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

எமக்கு தற்போது எண்ணக்கரு இருக்கின்றது. இந்த பிராந்தியத்தை இந்து – பசுபிக் என அமெரிக்கா அழைத்தது.

எனினும் சீனா, இந்திய – பசுபிக் பிராந்தியம் என வரையறுக்கும் நடவடிக்கை என கருதுகிறது. எனினும் அது அப்படியல்ல.

எது எப்படி இருந்த போதிலும் சீனா தந்திரோபாயமாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இலங்கையும் அதில் சிக்கியுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சைனா மேர்ச்சன்ட் மற்றும் துறைமுக அதிகார சபையும் இணைந்து அரச மற்றும் தனியார் பங்குதாராக மாறியதை இதற்கு காரணம்.

நாம் எதிர்பார்க்காத அளவுக்கு ஹம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவின் கடற்படை தலைமையகமாக மாறலாம் என்று சந்தேகம் வெளியிடப்படுகிறது.

எனினும் அவ்வாறு எதுவும் நடக்காது. இலங்கையின் பாதுகாப்பு இலங்கை அரசிடமே இருக்கும் என்பதை வலியுறுத்தி கூற விரும்புகிறேன்.

சீன நிறுவனத்துடன் செய்துக்கொண்டுள்ள உடன்படிக்கையில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனை சீன நிறுவனமும் ஏற்றுக்கொண்டுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா, தனது கடற்படை தளமாக பயன்படுத்த வாய்பில்லை. கடற்படையின் தெற்கு கட்டளை தலைமையகம், காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு மாற்றப்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.