சுய நலத்திற்காக புலிகளை இழுத்து வில்லங்கத்தை தேடிய விஜயகலா? அமைச்சுப் பதவிக்கும் ஆப்பு?

ஒரே பார்வையில்..

0

விடுதலைப் புலிகள் இயக்கம் தொடர்பில் பேசுவதன் மூலம் தமிழ் மக்களை மயக்கி ஏமாற்றலாம் என்பதற்காக சிங்கள அரச அமைச்சர் விஜயகலா நேற்று யாழில் நடந்த ஓர் நிகழ்வில் மீண்டும் விடுதலைப் புலிகளின் கை ஓங்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

சிங்கள அரசில் அமைச்சராக இருந்து கொண்டு இவ்வாறு தெரிவிப்பது வேடிக்கையானது. இந்த நிலையில் இவர் மீது சிங்கள அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று விஜயகலா விவகாரத்தால் பாராளுமன்றமே ஸ்தம்பிதமானது. இந்த நிலையில் விஜயகலா உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றுள்ளார்.

அவர் தொடர்பில் வெளியவந்த செய்திகள் ஒரே பார்வையில்.

விடுதலைப் புலிகள் விவகாரம்! விஜயகலா மீது கடும் நடவடிக்கை! ஜனாதிபதி அதிரடி உத்தரவு!!

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

வடக்கில் நேற்றைய தினம் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன், தமிழ் மக்கள் பாதுகாப்பாக வாழ மீண்டும் விடுதலைப் புலிகள் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இராஜாங்க அமைச்சர் பதவியில் உள்ள ஒருவர் அவ்வாறு கருத்து வெளியிட முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அத்துடன் இது தொடர்பில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

விஜயகலாவை மனநல வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டும்! நாடாளுமன்றில் குழப்பம்!!

பிரபாகரன் தொடர்பில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா கூறிய கருத்து தொடர்பில் தான் அவரை தொடர்பு கொண்டு வினவியதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இராஜாங்க அமைச்சர் விஜயகலாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்ட போது தான் மன கஸ்டத்தில் இருந்ததால் தான் அவ்வாறு கூறியதாக தெரிவித்தார்.

இது தவறு எனில் ஹிட்லர் தொடர்பில் கூறப்பட்ட கருத்தும் இது போன்றதொன்றே என கூறியுள்ளார்.

இதற்கு பதில் கருத்து கூறிய மரிக்கார், அவ்வாறு அவருக்கு மன கஸ்டம் இருக்குமாயின் அவரை மனநல வைத்தியசாலைக்கு அனுப்ப வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் காரணமாக குழப்பம் ஏற்பட்ட நிலையில் நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

விஜயகலா மகேஷ்வரனின் கருத்து தொடர்பில் விசாரணை- சபாநாயகர்

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று பிரதமர் மற்றும் சபாநாயகர் பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியதையடுத்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று பாராளுமன்றம் கூடிய போது விஜயகலா மகேஷ்வரன் தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்தினால் பாராளுமன்றில் பெரும் வாதப்பிரதிவாதங்கள் ஏற்பட்டன.

அவரை அமைச்சுப் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கையும் சபாநாயகரிடம் விடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும் தொடர்ந்து பாராளுமன்ற அமர்வுகளை நடத்திச் செல்வதற்கு தடை ஏற்பட்டதால் பாராளுமன்ற அமர்வை நாளை (04) காலை வரையில் ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

விஜயகலா மகேஷ்வரனை பதவி விலக்க கோரிக்கை

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனை பதவி விலக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆளும் கட்சி மற்றும் எதிரக்கட்சி உறுப்பினர்கள் சிலர் பாராளுமன்ற சபாநாயகரிடம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளை மீண்டும் உருவாக்க வேண்டும் என்பதே தமது முக்கிய நோக்கம் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஷ்வரன் நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றியதையடுத்து சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.