செம்மணியில் மூன்று அடி ஆழத்திலேயே எலும்புகூடுகள் மீட்பு!

0

யாழ்ப்பாணம் செம்மணிப் பகுதியில் காணப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக இன்று மேற்கோள்.ளப்பட்டு வருகின்ற அகழ்வுப் பணிகளின் போது எலும்புக் கூடுகள் மீட்கப்பட்டு வருகின்றன.

நாயன்மார்கட்டு செம்மணி பகுதியில் நிலக்கீழ் தொட்டி அமைப்பதற்காக மண் அகழ்வுகளை மேற்கொண்ட போது மனித எலும்பு எச்சங்கள் இணங்கானப்பட்டுள்ளன.

இதற்கமைய பொலிஸாருக்கு அளிவிக்கப்கட்டதையடுத்து அதுதொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கையை பொலிஸார் யாழ் நீதிவான் நீதிமன்றில் சமர்ப்பித்திருந்தனர்.

இதனையடுத்து அங்கு அகழப்பட்ட மண்ணை முழுமையாக பரிசோதனை செய்யுமாறு நீதி மன்றத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த்து.

இதற்கமைய சம்பவ இடத்தில் சட்ட வைத்திய அதிகாரி மயூரதன் யாழ் பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸார் ஆகியோர் முன்னிலையில் அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இதன் போது மண்ணை மூன்று அடி அழத்துல் தோன்றிய போது எலும்பு கூடுகள் மீட்கப்பட்டுள்ளது.

இந்தப் பணிகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தொடர்ந்தும் எலும்புக் கூடுகள் மீட்கப்படலாமென்றும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

அத்தோடு இனி ஐந்து அனி அழத்துல் மண்ணை தோண்ட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.