ஜெயலலிதாவின் மரணத்தை கிண்டல் செய்த திமுக முன்னாள் அமைச்சர் ! தன்வினை தன்னை சுடும்! காணொளி இணைப்பு

0

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுக கட்சியின் தலைவியுமான செல்வி ஜெயலலிதா அவர்களின் மரணம் தொடர்பில் திமுக முன்னாள் அமைச்சர் ஒருவர் கிண்டல் செய்து உரையாற்றிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகியுள்ளது .

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திமுக கட்சியின் தலைவருமான கலைஞர் கருணாநிதி கடந்த சில தினங்களாக சுகயீனம் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .கருணாநிதி ஈழத்தமிழர்கள் விடயத்தில் இழைத்த துரோகத்தின் காரணமாக சமூக வலைத்தளங்களில் கருணாநிதியின் மரணத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றார்கள் .கலைஞரின் மரணத்தை கொண்டாட கடந்த சில தினங்களாக நெட்டிசன்கள் தயார் நிலையில் உள்ளார்கள் .

கருணாநிதியின் மரணம் தொடர்பிலான மீம்ஸ்கள் பேஸ்புக்கில் நிறைந்து காணப்படுகின்றது .இதனால் திமுக தொண்டர்கள் மற்றும் திடீர் மனிதாபிமானிகள் கொதிப்படைந்துள்ளார்கள் .ஒருவரின் மரணத்தை எதிர்பார்த்து காத்திருப்பது எந்த விதத்தில் நியாயம் என்று திமுக தொண்டர்களும் , திடீர் மனிதாபிமானிகளும் பேஸ்புக்கில் பொங்கியெழுந்துள்ளார்கள் .

தமது தலைவர் தொடர்பாக வெளிவரும் கிண்டல்களுக்கு நியாயம் கேட்கும் திமுக தொண்டர்கள் அன்று செல்வி ஜெயலலிதாவின் இறப்பு தொடர்பில் பொதுவெளியில் கிண்டல் செய்த திமுக முன்னாள் அமைச்சரின் கருத்து தொடர்பில் ஏன் மௌனமாக இருந்தார்கள் ?உண்மையில் இவர்கள் மனிதாபிமானம் உடையவர்கள் என்றால் அன்று ஜெயலலிதாவின் மரணத்தை கிண்டல் செய்திருக்க மாட்டார்கள் .உங்களுக்கு வந்தா இரத்தம் எங்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா என்று அதிமுக தொண்டர்கள் மற்றும் கருணாநிதியின் எதிர்ப்பாளர்கள் கேள்வியெழுப்பி உள்ளார்கள் .

ஈழத்தமிழர்கள் விடயத்தில் ஜெயலலிதா தமிழர்களுக்கு நல்லதும் செய்யவில்லை அதே சமயத்தில் கெட்டதும் செய்யவில்லை .விடுதலை புலிகளை வெளிப்படையாகவே ஜெயலலிதா எதிர்த்தவர் .கருணாநிதி போன்று நீலிக்கண்ணீர் வடித்து நாடகம் ஆடி துரோகம் இழைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .ஆகையால் ஈழத்தமிழர்கள் மனதில் ஜெயலலிதா அம்மையாருக்கு இடம் உண்டு .எதிரிகளை விட துரோகிகளே ஆபத்தானவர்கள் என்று தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் கூறிய கூற்றுக்கு இணங்க துரோகி கருணாநிதிக்கு ஈழத்தமிழர்களின் மனதில் துளி கூட இடமில்லை.

Leave A Reply

Your email address will not be published.