1983ம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற கருப்பு ஜூலை வன்முறை தொடர்பில் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
கருப்பு ஜூலை சம்பவம் இடம்பெற்று 35 வருடங்கள் ஆகின்ற நிலையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
கலவரத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதாகவும் அவர்களது குடும்பத்தாருக்கு தமது வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதாகவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்க்கப்பட்டுள்து.
இதேவேளை, இலங்கையின் பொறுப்புக்கூறல் செயற்பாடுகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு, அர்த்தமுள்ள நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது அவசியமென குறித்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் இலங்கை அரசாங்கத்துடன் கனடா எப்போதும் இணைந்து பணியாற்றும் என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்த அறிக்கையினூடாக குறிப்பிட்டுள்ளார்.