யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் கடந்த 25 ம் திகதி 6 வயது சிறுமி ரெஜினா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்து தற்போது விமர்சனத்தையும் சிரிப்பினையும் ஏற்படுத்தியுள்ளது .
சிறுமி ரெஜினா தற்கொலை செய்துகொண்டுள்ளதாக, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் முன்னிலையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற அரச வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இங்கு அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,உண்மையிலேயே ஒரு பெண் எவ்வளவு துன்பத்துக்கு உள்ளாகின்றாள் என்பது பெண்ணுக்கே விளங்கும், ஆணுக்கு விளங்கமாட்டாது. ஆறு வயதுச் சிறுமி பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு தற்கொலை செய்யப்பட்டுள்ள இந்த நிலையில் எதற்காக உத்தியோகப்பூர்வப் பணி இந்த மாவட்டத்திற்கு என அங்கு வருகைத்தந்திருந்த அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
ஒரு அமைச்சருக்கு கொலைக்கும் தற்கொலைக்கும் இடையிலான வித்தியாசம் கூட தெரியாதா என்று மக்கள் ஏளனம் செய்து வருகின்றனர்.மேலும் ஒரு பொறுப்புள்ள அமைச்சர் கொலையை தற்கொலை என்று கூறியமை மக்களை விசனம் அடையச்செய்துள்ளது.