தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு

0

ஐந்து போட்டிகள் கொண்ட தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. #SLvSA

இலங்கை – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் முடிவடைந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இலங்கை 2-0 என வெற்றி பெற்று தென்ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்தது.

ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வருகிற 29-ந்தேதி நடக்கிறது. இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஆல்ரவுண்டர் மேத்யூஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. மேத்யூஸ் (கேப்டன்), 2. தசுன் ஷனாகா, 3. குசால் பெரேரா, 4. தனஞ்ஜெயா டி சில்வா, 5. உபுல் தரங்கா, 6. குசால் மெண்டிஸ், 7. திசாரா பெரேரா, 8. நிரோஷன் டிக்வெல்லா, 9. சுரங்கா லக்மல், 10. ரஹிரு குமாரா, 11. கசுன் ரஜிதா, 12. அகிலா தனஞ்ஜெயா, 13. பி ஜெயசூர்யா, 14. லக்‌ஷ்மண் சண்டகன், 15. எஸ் ஜெயசூர்யா.

Leave A Reply

Your email address will not be published.