தோனி பிறந்த நாளுக்கு கோலி, ஸிவாவின் சர்ப்ரைஸ் வாழ்த்து!

0

இன்று தோனியின் பிறந்தநாளுக்காக இந்திய வீரர்களின் வாழ்த்துகளை வீடியோவாக பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இந்திய வீரர்களோடு தோனியின் மகள் ஸிவாவும் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
தோனி கோலி ஸிவா

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி, இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் ஆடி வருகிறார். இன்று தோனியின் பிறந்தநாளுக்காக இந்திய வீரர்களின் வாழ்த்துகளை வீடியோவாக பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் இந்திய வீரர்களோடு தோனியின் மகள் ஸிவாவும் அவரது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இந்திய கேப்டன் கோலி `நீங்களும், உங்கள் வயதும் இன்னும் ஃபிட்டாகவும், வலிமையாகவும் இருக்கிறீர்கள். எனது கிரிக்கெட் வாழ்க்கையை உங்கள் தலைமையின் கீழ்தான் தொடங்கினேன். நீங்கள் வேகமாக விக்கெட்டுகளுக்கு இடையே ஓடுவதைப் பார்ப்பது அவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது. உங்களோடு எப்போதும் இருப்பது மகிழ்ச்சி’ என்று தோனியைப் புகழ்ந்துள்ளார்.

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் `நான் டி20, டெஸ்ட், ஒருநாள் போட்டி என மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் உங்கள் தலைமையில்தான் அறிமுகமானேன். இதை நான் எப்போதும் பெருமையாகக் கருதுவேன். உங்களோடு இணைந்து ஆடுவது எப்போதும் மகிழ்ச்சியான விஷயம்” என்றார்

இதேபோல தினேஷ்கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா, தவான், ரோஹித் ஷர்மா, குல்தீப், சாஹல், ரெய்னா ஆகியோரும் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்டனர். அந்த வீடியோவின் இறுதியில் தோனியின் மகள் ஸிவா “லவ் யூ அப்பா, உங்களுக்கு வயதாகிவிட்டது” என்று கிண்டலாகக் கூறினார்.

தோனியின் பிறந்தநாளை இங்கிலாந்தில் சிறப்பாக இந்திய அணி நேற்று கொண்டாடியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.