பக்தைகளிடம் லீலை- அரியானாவில் மேலும் ஒரு சாமியார் சிக்கினார்

0

அரியானா மாநிலம், பதேஹாபாத் மாவட்டத்தில் தன்னை நாடி வந்த பக்தைகளை கற்பழித்து, சீரழித்ததுடன் வீடியோவாக படம்பிடித்த சாமியாரை போலீசார் கைது செய்தனர்.

பக்தைகளிடம் லீலை- அரியானாவில் மேலும் ஒரு சாமியார் சிக்கினார்
சண்டிகர்:

அரியானா மாநிலம், பதேஹாபாத் மாவட்டம், சக்தி நகர் பகுதியை சேர்ந்தவர் அமர் பூரி. பலக்நாத் கோவிலில் பூசாரியாக உள்ளார். சக்திமிக்க சாமியார் என்று இவரை நாடி வந்த பல பெண்களை இவர் கெடுத்து, சீரழித்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதைதொடர்ந்து, கடந்த வியாழக்கிழமை இரவு சாமியார் அமர் பூரி வீட்டை முற்றுகையிட்ட போலீசார் நடத்திய சோதனையில் பல பெண்களுடன் இவர் இணைந்திருக்கும் ஆபாச சி.டி.க்கள் பிடிபட்டன.

உடனடியாக அவரை கைது செய்த போலீசார், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அமர் பூரியை 5 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்ததையடுத்து, அவரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். #haryanagodmanheld #femaledisciples

Leave A Reply

Your email address will not be published.