பெண்களை பாலியல் பொருட்களாக பார்க்காமல், அவர்களையும் சக மனிதர்களாக பார்க்கவும், ஆண் -பெண் சமத்துவத்தை புரிய வைக்கவும், வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டுள்ளார் பாடசாலை அதிபர் ஒருவர்.
இடதுசாரிய சிந்தனையுள்ள கருணாகரன் என்ற அதிபரே இந்த வித்தியாசமான முன்னுதாரண முயற்சியில் இறங்கியுள்ளார். நாவலப்பிட்டிய கந்தலோயா தமிழ் வித்தியாலயத்தில் இந்த முயற்சிகள் ஆரம்பித்துள்ளன.
அந்த பகுதியில் அவரது முற்போக்கான நடவடிக்கைகளால் அவரை பெரிதும் மக்கள் மதிப்பதும் குறிப்பிடத்தக்கது.
யட்டியாந்தோட்ட கருணாகரன் என்ற பெயரில் இலக்கியம், சமூகம், அரசியல் என பல துறைகளில் தீவிரமாக செயற்பட்டு வருகிறார். கந்தலோயா விடியல் குழு என்ற பெயரில் அங்கு நாடக குழுவொன்று அமைக்கப்பட்டு, நாட்டார் இயல் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும், அவரது நடவடிக்கைக்கு அடிப்படைவாத சிந்தனையுள்ள சிலரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பி வருவதும் குறிப்பிடத்தக்கது. எனினும், அவரது நடவடிக்கைகளால் உள்ளூரில் நிறைய விழிப்பணர்வு ஏற்பட்டு வருவதாக மக்கள் கூறுகிறார்கள்.
மேலும் கந்தலோயா பாடசாலை இதற்காக தொடர்ந்தும் முயற்சிக்கிறது.அதிபர் என்ற ரீதியில் ஆகக் குறைந்தது 04 பெற்றோர்களிடமாவது அடி வாங்கியிருக்கின்றேன் என்கிறார் அதிபர்.