பாரிய மரத்திற்குள் காத்திருந்த அதிர்ச்சி! வியப்பை ஏற்படுத்திய சம்பவம்!

0

மஹியங்கனை ரஜமஹா விகாரைக்கான அபிவிருத்தி திட்டத்திற்காக மரம் ஒன்று வெட்டி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு மரத்தின் ஓட்டையில் பாரிய மாம்பு ஒன்று தனது 28 முட்டைகளை பாதுகாத்துள்ள நிலையில் மஹியங்கனை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து அந்த பாம்பு மற்றும் முட்டைகளை கிராதுருகோட்டையில் அமைந்துள்ள வனவிலங்கு திணைக்கள அதிகாரிகளிடம் அறிவித்து, பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

மரத்தை வெட்டி கீழே சாய்த்த போது மரம் ஆடியமையினால் பாம்பு பதற்றமடைந்து மரத்திற்கு வெளியே வந்துள்ளது. அதனை அவதானித்த மரம் வெட்டும் நபர் மஹியங்கனை பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

அங்கு வந்த பொலிஸார், வனவிலங்கு அதிகாரிகள் தாய் மற்றும் முட்டைகளை பாதுகாப்பாக எடுத்துள்ளனர். அவ்வாறு மீட்கப்பட்ட பாம்பு சுமார் 12 அடி நீளமானதென தெரிவிக்கப்படுகின்றது.

Leave A Reply

Your email address will not be published.