பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினார் ரம்யா என்.எஸ்.கே

0

பிக் பாஸ் ஷோவிலிருந்து நான்காவது நபராக வெளியேறியுள்ளார் பாடகி ரம்யா என்.எஸ்.கே. இன்று (22/07/18) இரவு இந்த எலிமினேஷனை அறிவிக்கிறார் கமல்.

ரம்யா, தாடி பாலாஜி, பொன்னம்பலம், ஐஸ்வர்யா, ஜனனி ஆகியோர் இந்த வார எவிக்‌ஷனுக்குத் தேர்வாகியிருந்ததில் ரம்யா வெளியேறியது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையே இந்த வார கமல் எபிசோடுக்கான ஷூட்டிங் முடிந்து விட்ட நிலையில்,அன்றே பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்ட ரம்யா மறுநாளே நெருங்கிய ஃப்ரண்ட்ஸ் சிலருடன் அவுட்டிங் சென்றுள்ளார்.

ரம்யா வெளியேறிய போது கமல்ஹாசனே ‘நீங்க நடந்து கொள்கிற விதம், உங்க அப்ரோச்லாம் வெளியுலக வாழ்க்கைக்கு ஓ.கே. ஆனா பிக் பாஸ் வீட்டுக்குள்லேயும் அப்படியே இருந்தீங்கன்னா, அங்க இருக்கிறவங்க உங்களைத் தூக்கிச் சாப்பிட்டுடுவாங்க’ என அட்வைஸ் பண்ணி அனுப்பினாராம்.

பிக் பாஸ் வீட்டுக்குள் ரம்யா தனக்கு ரொம்பவே சப்போர்ட்டாக இருந்தாகக் குறிப்பிடும் நித்யா பாலாஜி, ‘எனக்குத் தெரிய, அவங்க ரொம்ப சாந்தமானவங்களா இருக்காங்க. நண்பர்களோட சண்டைன்னு வந்த போனைக் கட் பண்றதுதான் அவங்களோட அதிகபட்சக் கோபமா இருக்குது’ என்கிறார்.

‘இப்படிப்பட்டவர் தொடர்ந்து உள்ளே இருந்தாலும் என்ன கன்டென்ட் கிடைத்து விடப் போகிறது’ என நினைத்து விட்டாரோ பிக் பாஸ்?

Leave A Reply

Your email address will not be published.