பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை வேண்டும்! அனுஷ்காவின் தாயார் பேச்சு

0

பிரபாஸ் – அனுஷ்கா காதலிப்பதாக பல்வேறு தகவல்கள் வரும் நிலையில், பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன் என்று அனுஷ்காவின் தாயார் தெரிவித்துள்ளார். #Prabhas #AnushkaShetty

பாகுபலி படத்தில் நடித்ததில் இருந்து பிரபாசும், அனுஷ்காவும் காதலிப்பதாக தொடர்ந்து பேசப்படுகிறது. பிரபாஸ், அனுஷ்கா திருமணம் செய்து கொள்ளப்போவதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றது.

இதுகுறித்து அனுஷ்காவின் தாயார் கூறும்போது ‘எனக்கு பிரபாசை மிகவும் பிடிக்கும். அவரும், அனுஷ்காவும் சேர்ந்து நடித்துள்ளனர். என் மகள் அனுஷ்காவுக்கு பிரபாஸ் போன்ற மாப்பிள்ளை கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சி அடைவேன். ஆனால் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே. அவர்களுக்கு இடையே காதல் இல்லை. அதனால் அவர்களின் திருமணம் பற்றி வதந்தி பரப்புவதை நிறுத்துங்கள்’ என்று தெரிவித்துள்ளார். #Prabhas #AnushkaShetty

Leave A Reply

Your email address will not be published.