பெல்ஜியத்தின் தலையில் பெல் அடித்த பிரான்ஸ் ! 12 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி போட்டிக்கு தகுதி

0

FIFA உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் அரை இறுதியில் மிகவும் வலுவான பெல்ஜியத்தை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று மூன்றாவது முறையாக பைனல் நுழைந்தது பிரான்ஸ். 12 ஆண்டுகளுக்குப் பிறகு இறுதி போட்டியில் பிரான்ஸ் விளையாட உள்ளது.

21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. கடந்த மாதம் 14ம் தேதி துவங்கிய இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்றன. முதல் சுற்று ஆட்டங்கள், நாக் அவுட் ஆட்டங்களைத் தொடர்ந்து காலிறுதி ஆட்டங்களும் முடிந்துள்ளன. பிரான்ஸ், பெல்ஜியம், குரேஷியா, இங்கிலாந்து ஆகியவை அரை இறுதிக்கு நுழைந்தன.

அரை இறுதியில் விளையாடும் பிரான்ஸ் 1998ல் கோப்பையை வென்றது. இங்கிலாந்து 1966ல் கோப்பையை வென்றுள்ளது. மற்ற இரு அணிகளும் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முயற்சியில் உள்ளன. செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் இன்று நடந்த முதல் அரை இறுதியில் பிரான்ஸ் 1-0 என பெல்ஜியத்தை வென்றது. நாளை இரவு 11.30 மணிக்கு மாஸ்கோவில் நடைபெறும் இரண்டாவது அரை இறுதியில் இங்கிலாந்து, குரேஷியா மோத உள்ளன.

நேற்று நடந்த அரை இறுதியில் பெல்ஜியம் அணியின் ஆதிக்கமே இருந்தது. பெரும்பாலான நேரம் பந்து அந்த அணியிடமே இருந்தது. முதலில் இரு அணிகளும் நிதானமாக, எதிரணிக்கு வாய்ப்பு அளிக்காமல் விளையாடின. இரு அணிகளும் கோல் அடிக்காமல் முதல் பாதி 0-0 என முடிந்தது. ஆட்டத்தின் 51வது நிமிடத்தில் கிரீஸ்மான் கடத்தி கொண்டு வந்து கொடுத்த பந்தை கோலாக்கினார் உம்டிடி. இதன் மூலம் 1-0 என பிரான்ஸ் வென்று, 12 ஆண்டுகளுக்குப் பிறகு பைனல் நுழைந்துள்ளது. 2006ல் இரண்டாவது இடத்தைப் பிடித்திருந்தது பிரான்ஸ்.

Leave A Reply

Your email address will not be published.