பொட்டு நீ நில்லு நான் போறன் நான் போயிட்டா நீ பாத்துக்கோ ! அன்றே தீர்க்கதரிசனமான முடிவெடுத்த தலைவர்

0

வான் புலிகளின் விமான பயிற்சி ஒன்றுக்கு தலைவர் அவர்களுடன்,பொட்டண்ணையும்,தமிழ்செல்வன் அண்ணா,தீபன் அண்ணா,ஜெயம் அண்ணா,துர்க்கா அக்கா ஏனைய சில போராளியளும் செல்கின்றனர்.விமான ஓடுதளத்தில் விமானம் வந்து நிற்கின்றது விமானதில் ஏற தலைவர் செல்கின்றார் தலைவரை பின்தொடர்ந்து பொட்டண்ணையும் செல்கின்றார் இரண்டு முன்று அடிகள் நடந்த தலைவர் திரும்பி பொட்டண்ணையிடம்

“பொட்டு நீ நில்லு நான் முதல் போறேன் நான் போயிட்டா நீ பாத்துக்கோ”

என்று சொல்லுகின்றார் தலைவர் கூறியதன் அர்த்தம் பொட்டண்ணைக்கு சற்று தாமதமாகதான் விளங்கியது.அதாவது இந்த பயிற்சியின் போதுகூட என் உயிருக்கு ஏதும் நிகழ்ந்துவிட்டால் விடுதலைப்போராட்டத்தை நீ தலைமைதாங்கி முன்னெடுத்து செல் என்பதுதான் தலைவர் கூறியதன் அர்த்தம்.இருவரும் ஓரே நேரத்தில் சென்று ஏதும் அசம்பாவிதம் நடந்தால் இருவருமே ஒரே நேரத்தில் உயிரிழக்க நேரிடும் என்பதைதான் தலைவர் சூசகமாக சொன்னார்.இலட்சியத்திற்காக ஒவ்வொரு நொடியும் மரணத்தை சந்திக்க,மரணத்தை முத்தமிட,சாவை தன்வாசலில் சந்திக்க மிகதெளிவான சிந்தனையுடன் இருந்தவர் எம் தலைவர்.

#யார்_தலைவன்_எவன்டா_தலைவன்…?

#நாய்_நரியெல்லாம்_தலைவரோ…?

பிறப்பிலையே வசதியானதொரு குடும்பத்தில் பிறந்துவிட்டு எவன் எக்கேடு கெட்டு போனால் எனக்கென்ன, தானுன்டு தன்வேலையுண்டு என்றில்லாமல் உலகின் மற்ற இன மக்களைப் போல் எங்கள் தமிழ் மக்களும் தலைநிமிர்ந்து கெளரவமாக பாதுகாப்பாக அடிப்படை உரிமைகள் பெற்று வாழவேண்டும் என்பதையே தனது வாழ்வின் இலட்சியமாக வரித்துகொண்டு அதற்காக அல்லும் பகலும் உழைத்தானே அவனன்றி யாருனக்கு தலைவன்.

குட்ட குட்ட குனிந்து புழுவாய் நெளிந்த உன்னை புலியென தன்மானத்துடன் தலைநிமிர செய்தானே அவனன்றி யாருனக்கு தலைவன்.

போராளி பிள்ளையளுக்கும் தன்பெற்ற பிள்ளையளுக்கும் இமியளவும் பாகுபாடு பாராமல் தான் பெற்ற பிள்ளைகளையும் களத்தில் முன்னிறுத்தி வீரமரணத்தை பரிசாக கொடுத்து சமத்துவத்தை போதித்தானே அவனன்றி யாருனக்கு தலைவன்.

புலம்பெயர் மக்களிடமிருந்து அதிகளவில் நிதி இயக்கதிற்கு கிடைத்தபோதும்.வீட்டு செலவிற்கு காசு கேட்ட மனைவி மதிவதனியிடம்
“என்னிடம் எங்க இருக்கு காசு.கோழி வளருங்கள் கோழி,முட்டைகளை விற்று குடும்ப செலவை சமாளியுங்கள்”என்று பதில் சொல்லி நீதியும் நேர்மையுமாய் தமிழ்மக்களின் பாரசிலுவையை தன்தோளில் சுமந்தானே அவனன்றி யாருனக்கு தலைவன்.

ஓவ்வொரு முறையும் இலக்கு நோக்கி கரும்புலிகளை கையசைத்து வழியனுப்பும்போது “நீங்கள் முன்னால் செல்லுங்கள் நான் பின்னால் வருகிறேன்” என்று புன்னகைப்பானே அவனன்றி யார்ருனக்கு தலைவன்.

போராளிகளுக்கும் தளபதிகளுக்கும் உயிரை பறிக்கும் நஞ்சுமலை ஒன்றை அணிவித்துவிட்டு தான்மட்டும் இரண்டை அணிந்துகொண்டு சாவை சந்திக்க எல்லோருக்கும் ஒரு படி முன்னுக்கு நின்றானே அவனன்றி யாருனக்கு தலைவன்.

தலைவர் காலத்து தமிழன் என்ற இறுமாப்பும் தலைவரின் தம்பிகள்,,பிள்ளைகள் என்ற கர்வமும் கொள்வோம்.மார்தட்டி சொல்லுவோம் தேசிய தலைவர் ஒருவரே எங்கள் நிரந்தரமான தலைவர் என்று.

Leave A Reply

Your email address will not be published.