போர்த்துக்கலின் தலையில் அம்மி கல்லை தூக்கி போட்ட உருகுவே ! வெளியேறியது போர்த்துக்கல்

0

21வது ஃபிபா உலகக் கிண்ண கால்பந்தாட்ட போட்டியில் நேற்று இடம்பெற்ற போட்டியில் எடின்சன் கவானி 2 கோல்கள் அடிக்க 2-1 என போர்த்துகல் அணியை வென்று காலிறுதிக்கு நுழைந்தது உருகுவே.மெஸ்ஸியின் அர்ஜென்டினாவைத் தொடர்ந்து ரொனால்டோவின் போர்த்துகல் அணியும் நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியது.

நேற்றைய போட்டியில் 67 சதவீத நேரம் பந்து போர்த்துகல் அணியிடமே இருந்தது. ஆனால், உருகுவேயின் தடுப்பாட்டத்தை தகர்க்க முடியாமல் திணறியது. நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ லீக் ஆட்டங்களில் ஹாட்ரிக் உள்பட 4 கோல்களை அடித்துள்ளார். இதுவரை நாக் அவுட் சுற்றில் ஒரு கோல் கூட ரொனால்டோ அடித்ததில்லை. அந்த ராசி அவருக்கு தொடர்கிறது. இன்றைய ஆட்டத்தில் அவர் கோல் ஏதும் அடிக்கவில்லை.

ஆட்டத்தின் 7வது நிமிடத்திலேயே கவானி முதல் கோலடிக்க 1-0 என உருகுவே முன்னிலை பெற்றது. ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் பீபே கோலடிக்க 1-1 என போர்த்துகல் சமநிலையை உருவாக்கியது. 62வது நிமிடத்தில் கவானி மீண்டும் கோலடிக்க 2-1 என உருகுவே முன்னிலை பெற்றது. இறுதியில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகலை வென்று காலிறுதிக்கு முன்னேறியது உருகுவே. மெஸ்ஸியின் அர்ஜென்டினாவைத் தொடர்ந்து ரொனால்டோவின் போர்த்துகல் அணியும் நாக் அவுட் சுற்றுடன் வெளியேறியது.

இம்முறை உலக கிண்ணத்தை வெல்லும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மெஸ்ஸியின் ஆர்ஜென்டினா மற்றும் ரொனால்டோவின் போர்த்துக்கல் ஆகிய அணிகள் நொக்கவுட் சுற்றுடன் வெளியேறியுள்ளமையினால் கால்பந்தாட்ட ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள் .

Leave A Reply

Your email address will not be published.