நவோதய மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான எஸ்.கே. கிருஷ்ணா சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 7.20 மணிக்கு இவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.செட்டியார் தெருவில் உள்ள அவரது காரியாலயத்திற்கு முன்பாக இன்று காலை இனந்தெரியாத நபர்களால் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என எமது செய்தியாளர் தெரிவித்தார்.
1979ஆம் ஆண்டு ஜூலை மாதம் 28ஆம் திகதி பிறந்த கிருஷ்ணா என்று அழைக்கப்படும் கிருஷ்ணபிள்ளை கிருபானந்தன் தனது 39ஆவது வயதில் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த இவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
நவோதய மக்கள் முன்னணியின் தலைவர் கிருஷ்ணா, கொழும்பு மாநகர சபைக்கான தேர்தலில், சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டு வெற்றியீட்டியவராவார். கொழும்பு வாழ் தமிழ் மக்களுக்கு கிருஷ்ணா பல உதவிகளை செய்து வந்ததுடன், இவரது அரசியல் வளர்ச்சி ஏனைய சிறுபாண்மை கட்சிகளுக்கு பாரிய சவாலாக விளங்கியமை குறிப்பிடத்தக்கது.