மரண தண்டனை தீர்மானத்தை மீளப்பெறுங்கள்: மனித உரிமைகள் ஆணைக்குழு!

0

போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்றி, கடுமையான குற்றங்களை அடக்குவதற்கு சக்திவாய்ந்த கொள்கையை நடைமுறைப்படுத்துவது தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானத்தை மீளப்பெறுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்திலேயே இவ்வாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆணைக்குழுவின் நிலைப்பாடு குறித்து ஆணைக்குழுவின் தலைவர் தீபிகா உடுகம தெரிவிக்கையில், ”மரண தண்டனையானது கொடூரமான மற்றும் மனிதாபிமானமற்ற தண்டனையாகும். அதுமாத்திரமின்றி மரண தண்டனை என்பது வாழ்வதற்கான சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளை கடுமையாக மீறும் செயலாகும்.

போதைப்பொருள் கடத்தல்காரர்களில் பாரியளவிலான சமூக சீர்க்கேடுகள் ஏற்படுவதனை நாம் ஒப்புக்கொள்கின்றோம்.

ஆனால், இதனை கட்டுப்படுத்துவதற்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு மாறாக உரிய சட்ட நடவடிக்கை கடுமையாக்கி பொருத்தமான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதே ஆணைக்குழுவின் நிலைப்பாடு” எனத் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.