மாணவி துஷ்பிரயோகம் இராணுவ சிப்பாய் கைது!!

0

கெகிராவ-இலுக்கேகம பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில், 37 வயதுடைய இராணுவ சிப்பாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த இராணுவ சிப்பாய் இலுக்கேகம பகுதியைச் சேர்ந்தவர் எனவும், இவர் அப்பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் ஒன்றில் பணியாற்றி வருபவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி அயல்வீட்டில் வசித்து வருபவர் எனவும், இராணுவ சிப்பாயின் மகளுடன் சேர்ந்து படிப்பதற்காக அவர்களது வீட்டிடிற்கு சென்றிருந்த ​போ​தே இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில், சிறுமியின் தந்தை பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டடையடுத்து, இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுளார்.

சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்டுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.