அதிரடி பேட்ஸ்மேன் ஆன அந்த்ரே ரஸல் வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் நாள் அணியில் சுமார் மூன்று வருடங்களுக்குப் பிறகு இடம்பிடித்துள்ளார். #WI #Russell
மூன்றாண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் அணியில் இடம்பிடித்தார் அந்த்ரே ரஸல்
வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அந்த்ரே ரஸல். இவர் 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடருக்கப்பின் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற ஒருநாள் தொடரில் பங்கேற்றார். இலங்கைக்கு எதிரான முதல் போட்டியில் 24 பந்தில் 41 ரன்கள் சேர்த்தார்.
இந்த போட்டியின்போது அவரது இடது காலில் காயம் ஏற்பட்டது. இதனால் இலங்கை தொடரில் இருந்து விலகினார். அதன்பின் தற்போது வரை வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் அவர் இடம்பெறவில்லை. 2017-ம் ஆண்டு ஊக்கமருந்து சோதனைக்கான விதிமுறையை மீறியதாக தடைபெற்றார். இந்நிலையில் தற்போது மூன்ற ஆண்டுகள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் அணியில் இடம்பிடித்தள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் இலங்கையை எதிர்த்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான அணியில்தான் ரஸல் இடம்பிடித்துள்ளார்.