மைத்திரி ரணில் ஆட்சியிலும் கொலைக் கலாசாரமா?
வன்முறைகளை கட்டுப்படுத்த விசேட நடவடிக்கை எடுப்போம்! பொலிஸ்
கொழும்பில் இடம்பெற்ற இளம் அரசியல்வாதிமீதான கொலைச் சம்பவம், தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கையா என கேள்வி எழுப்பட்டுள்ளது. மகிந்த ஆட்சியில் இடம்பெறுவதுபோன் அதிர்ச்சியூட்டும் கொலைச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
எனினும் நாட்டில் அதிகரித்துவரும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக கோஷ்டியினரின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு விசேட சுற்றுவளைப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,
கொழும்பு, கொழும்பை அண்டிய பகுதிகளில் இடம்பெறுகின்ற துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுப்பதற்காக நகரில் பல்வேறு பகுதிகளில் விசேட சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே இவ்வாறு நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பல முறியடிக்கப்படுவதோடு, குற்றவாளிகளை இனங்கண்டு கைதுசெய்யும் நடவடிக்கைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மக்களுக்கு பொருளாதார சுமையை ஏற்றியுள்ள இன்றைய அரசு அடுத்த கட்டமாக கொலைக் கலாசாரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளதா என்றும் விசனம் எழுந்துள்ளது.