ரணிலின் காதில் சங்கு ஊதிய சங்கக்கார ! ஏமாற்றத்தில் ஐக்கியதேசிய கட்சி

0

இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாரா தான் ஒரு போதும் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று கூறியுள்ளார் .இதனால் ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய கட்சி ஏமாற்றம் அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை “நான் உறுதிப்படுத்தவோ மறுக்கவோ மாட்டேன்” என குமார் சங்கக்கார கூறியதாக சிலோன் ருடே பத்திரிகையில் வெளியான செய்தியை மறுத்துள்ள சங்கங்கார “அது நிச்சயமாக எனது வார்த்தைகள் இல்லை, அந்த அறிக்கையை யார் கொடுத்தார்கள் என்று எனக்கு தெரியாது. நான் அரசியலுக்கு வர மாட்டேன்” என்று தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.

குமார் சங்ககாரா இலங்கை மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் பெற்ற சிறந்த ஒரு மனிதர். குறிப்பாக தமிழ் மக்கள் , மற்றும் இளைஞர்கள் அனைவராலும் விரும்பப்படும் ஒரு மனிதர் .இதற்கு காரணம் அவரது வெளிப்படையான பேச்சும் , இனத்துவேசம் அற்ற கருத்துக்களும் தான் .

கல்வியறிவு மற்றும் சிறந்த நன்னடத்தை மற்றும் எளிமையான குணம் கொண்ட சங்காவின் பிரபல்யத்தை பயன்படுத்தி நரி புத்தி கொண்ட ரணில் தனது அரசியல் இலாபத்துக்காக சூழ்ச்சி வலையில் சிக்க வைத்து சங்கவின் மரியாதையை கெடுக்கும் முயற்ச்சியில் ஈடுபட்டார் .எனிலும் ரணிலின் வலைக்குள் சிக்காமல் தான் ஒரு சிறந்த நேர்மையான மனிதன் என்பதை சங்கக்கார மீண்டும் நிரூபித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.