ராஜபக்ச குடும்பத்தை தோற்கடிக்க அதிபர் தேர்தலில் சங்கக்கார!

0

இலங்கையின் முன்னாள் கிரிக்கட் அணித்தலைவர் குமார சங்கக்கார அரசியலுக்கு பிரவேசித்தால், அவருக்கு முழு ஆதரவு வழங்குவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் குமார சங்கக்கார, ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடுவாரா என ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பில், ஐக்கிய தேசிய முன்னணி கலந்துரையாடியில்லை எனவும் ஐக்கிய தேசிய கட்சி கலந்துரையாடியுள்ளதா என்பது தொடர்பில் தனக்கு தெரியாது எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன பதிலளில்த்தார்.

2020இல் அதிபர் தேர்தலில் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த கோத்தபாய ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜபக்ச குடும்பத்தை தோற்கடிக்க கிரிக்கெட் வீரர் சங்ககாரவை தேர்தலில் போட்டியிட வைக்கும் ஏற்பாடுகள் இடம்பெறுவதாக கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.