ராணுவ வீரரை கன்னத்தில் அறைந்த பாலஸ்தீன துணிச்சல் பெண் விடுதலை

0

பாலஸ்தீன நாட்டின் மேற்கு கரை பகுதியில் இஸ்ரேல் தனது ராணுவ அடக்குமுறை மூலம் அப்பகுதியை ஆக்கிரமிப்பு செய்து அங்கு குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இதற்கு பாலஸ்தீன மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ராணுவத்தின் அத்துமீறல்களை எதிர்த்தும் அடக்குமுறைகளை கண்டித்தும் பாலஸ்தீன மக்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தனது வீட்டின் அருகில் இருந்த பகுதியில் ராணுவ வீரர்கள் தனது உறவினரை தாக்குவதை கண்ட 15 வயது அஹெத் தமிமி என்ற பாலஸ்தீன சிறுமி ராணுவ வீரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது வீரர் ஒருவர் அவரை கன்னத்தில் அறைய, தமிமியும் ராணுவ வீரரை உதைத்து, கன்னத்தில் அறைந்தும் பதிலடி கொடுத்துள்ளார்.

இந்த சம்பவத்தை தமிமியின் தாயார் வீடியோ பதிவு செய்து பேஸ்புக்கில் வெளியிட்டார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. பாலஸ்தீன் மக்கள் மத்தியில் தமிமி முக்கியத்துவம் பெற்றார்.

இதையடுத்து, ராணுவ வீரரை தாக்கியதாக அவர் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடத்தப்பட்டது. அதில் தமிமிக்கு 8 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், ராணுவ வீரரை தாக்கியதாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன சிறுமி தமிமி, தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.