சிங்களம் தெரிந்தவர்கள் காணொளியை முழுமையாக கேட்கவும் – ரஞ்சன் ராமநாயக்க – தொலைபேசியில் விஜயகலா மகேஸ்வரன்
ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அண்மையில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பில் விளக்கம் பெறுவதற்கு நட்பு ரீதியாக விஜயகலாவுக்கு ஏற்படுத்திய தனிப்பட்ட அழைப்பை ஊடக சந்திப்பில் போட்டுடைத்தார் பிரதியமைச்சர் ரஞ்சன் றாமநாயக்க.
தன்மீதான விமர்சனங்களுக்கு அப்பால் தனக்கு தெரிந்த சிங்களத்தில் யாழ்ப்பாணத்தை படம் பிடித்து தெற்கிற்கு காட்டிய அவர்,
ஊடகங்கள் பொய்யை எழுதிவிட்டன என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தனது விளக்கத்தை அளித்துள்ளார்.
கொழும்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நேற்றைய தினம் செய்தியாளர் மாநாடு ஒன்றை நடத்தியிருருந்தார்.
அதன்போது மகளீர் சிறுவர் விவகார இராஜங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் யாழ்ப்பாணத்தில் கடந்த தினம் திங்கட்கிழமை தமிழீழ விடுதலைப்புலிகள் மீள உருவாக வேண்டும் என தெரிவித்த கருத்து தொடர்பில் தனது கையடக்க தொலைபேசியில் இராஜங்க அமைச்சரை தொடர்பு கொண்டு உரையாடினார்.
அதன்போதே தனது கருத்து தொடர்பில் விளக்கம் கொடுத்த பின்னர் இராஜாங்க அமைச்சர் சுமார் 20 நிமிடங்கள் தொலைபேசி ஊடாக உரையாடினார்.
இந்த உரையாடலை ஊடக சந்திப்பில் வெளிப்படையாக அனைவரும் கேட்கும் வகையில் அதனை செயற்படுத்தினார்.
எனினும் இவ்வாறு ஊடக சந்திப்பில் விஜயகலாவுடனான உரையாடலை வெளிப்படுத்துவது பற்றி ரஞ்சன் விஜயகலாவிடம் அனுமதி பெறவில்லை.
இது தமிழர்களை பெரும்பான்மையினத்தவர் எவ்வாறு விளையாட்டுத் தனமாக கையாள்கிறார்கள் என்பதனை புரிந்து கொள்ள வைக்கின்றது.
ராஜாங்க அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரனின் முன்னுக்கு பின்னான முரண்பட்ட நடவடிக்கைகள், உரைகள், செயற்பாடுகள், அனுபவம் அற்ற அரசியல் நடவடிக்கைகள், மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும் பேச்சுக்கள் என பல முரண்பாடுகளுக்கு அப்பால், ரஞ்சன் ராமநாயக்கவுடனான உரையாடலில் வடக்கின் உண்மை நிலவரங்கள் பலவற்றை துல்லியமாக வெளிப்படுத்தி உள்ளார்.
யுத்தத்தின் பின்னரான மக்களின் நிலை –
யுத்தத்தின் பின்னரான வறுமை..
யுத்தத்தின் பின்னரான வேலைவாய்ப்பின்மை..
யுத்தத்தின் பின்னரான சமூக சீர்கேடுகள்…
யுத்தத்தின் பின்னரான இரணுவம் – பொலிசாரின் அத்து மீறல்கள்..
யுத்தத்தின் பின்னரும் மக்களின் காணிகளை கையகப்படுத்தி வைத்திருக்கின்றமை..
யுத்தத்தின் பின்னரான வாழ்வெட்டு கலாசாரமும் பின்னணியில் படையினர் இருப்பதும்…
யுத்தத்தின் பின்னராக போதைப்பொருட்களின் ஆதிக்கம்…
போதைப்பொருட் கடத்தல்களின் பின்னணியில் அரசியல்வாதிகள் – பாதுகாப்பு தரப்பினரின் பங்கு…
சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் பொலிஸாரின் அசமந்தப் போக்கு…
என யாழ்ப்பாணத்தின் அவலத்தை தனக்கு தெரிந்த சிங்களத்தில் தெரிந்தோ – தெரியாமலோ – துணிந்தோ – துணியாமலோ கொழும்பின் ஊடகங்கள் கூடிய சந்திப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார்.
இந்த உரையாடல் சில இடங்களில் நகைச்சுவையாகவும், சில இடங்களில் குழைவாகவும், சில இடங்களில் நட்பாகவும் இருந்த போதும் இந்த உரையாடலில் தெரித்த பல விடயங்கள் தெற்கின் மக்களுக்கும் ஊடகங்களுக்கும் உரைக்கக் கூடியவை என்பதுடன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் பகிரங்க வாக்குமூலமாகவும் எடுத்துக்கொள்ள முடியும்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரீ.மகேஸ்வரனை, தமிழீழ விடுதலைப் புலிகள் கொலை செய்ததனை நீங்கள் பார்த்தீர்களா என பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிடம், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பில் அண்மையில் விஜயகலா மகேஸ்வரன் வெளியிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க, விஜயகலா மகேஸ்வரனுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். இதன்போது,
ரஞ்சன் : கொழும்பில் வைத்து, உங்கள் கணவரும் தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டார்.
விஜயகலா: இல்லை, பைத்தியமா, ரஞ்சன் நீங்கள் பார்த்தீர்களா புலிகள் கொலை செய்வதனை. எல்.ரீ.ரீ சுடும் போது நீங்கள் பக்கத்தில் இருந்தீர்களா?
ரஞ்சன் : நீங்கள் தமிழ் வாக்குகளை இலக்கு வைத்து தானே இந்த கருத்தை வெளியிட்டீர்கள். அது சரியில்லை. பயங்கரவாதத் தலைவர் ஒருவரை மீளக் கொண்டு வர வேண்டுமெனக் கோருவது ஏற்றுக்கொள்ள முடியாது.
விஜயகலா : ஐயோ ரஞ்சன் சிலவேளைகளில் பேசும் போது எமக்கு டென்சென். தவறுதலாக வார்த்தைகள் வரக் கூடுமல்லவா என்றவாறு உரையாடல் அமைந்துள்ளது.