தாம் எதிர்வரும் காலத்தில் நிம்மதியான வாழ்க்கையை வாழ வேண்டுமென்றால், தமிழீழ விடுதலைப் புலிகளின் கை வடக்கு – கிழக்கில் ஓங்க வேண்டுமென, சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் சற்று முன்னர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் தற்போது இடம்பெற்று வரும் நிகழ்வொன்றில் கலந்து கொண்டு, உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார்.ஆளும் அரசாங்கத்தை சேர்ந்த சிங்கள அமைச்சர்கள் இருவர் முன்னிலையில் விஜயகலா இவ்வாறு தெரிவித்தமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.