வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அதிகார சபை நிறுவுவது தொடர்பில் முதல்வர் விக்கியுடன் பேசத் தயார் – பிரதமர் !

0

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி அதிகார சபை நிறுவுவது தொடர்பாக வட மாகாண முதலமைச்சருடன் பேசுவதற்கு தயாராகவுள்ளேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று பிரதமர் மீதான கேள்வி நேரத்தின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிரதமர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு கிழக்கு அபிவிருத்தி அதிகார சபை நிறுவுவது தொடர்பாக நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இது தொடர்பாக மாகாண சபைகளுடன் பேச வேண்டும். தற்போது கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வடமாகாண முதலமைச்சருடன் பேசுவதற்கு தயாராக உள்ளேன். இது தொடர்பாக சட்டம் நிறைவேற்றுவதற்கு மாகாண சபையின் அங்கீகாரம் அவசியமாகும்.

அத்துடன் வடக்கு வீடமைப்பு தொடர்பாக வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களுடன் மீண்டும் பேச்சவார்த்தை நடத்தவதற்கு தயாராக உள்ளேன் என்றார்.

Leave A Reply

Your email address will not be published.