யாழ் வண்ணார்ப்பண்ணை கிழக்கு கிராம அலுவலகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன் அவரது அலுவலகம் அடித்து சேதமாக்கப்பட்டுள்ளது.
வாள்கள் கம்பிகளுடன் பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் இந்த அட்டூழியத்தை அரங்கேற்றி தப்பிச்சென்றது.
வண்ணார்ப்பண்ணை கிழக்கு 100 கிராம அலுவலரின் அலுவலகத்தில் நேற்று நண்பகல் 12.30 மணியளவில் இந்த அடாவடிச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அலுவலகத்துள் புகுந்த கும்பல் கிராம அலுவலரின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்திய கும்பல் அலுவலகத்திலிருந்து லெப்டொப் கைபேசி உள்ளிட்ட பெறுமதியான பொருட்களை உடைத்தவிட்டு தப்பிச்சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.