விடுதலைப்புலி ஆயுதங்களை பார்வையிட தடைவிதிக்கப்பட்டது ஏன்?

0

இலங்கையில் 2009ம் ஆண்டுக்கு முன்பு வரை விடுதலைபுலிகள் சொந்த முயற்சியில் ஏவுகணை, நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட போர் ஆயுதங்கள் தயாரித்து வைத்திருந்தது. உலகிலேயே அரசுக்கு எதிராக இருக்கும் இயக்கத்தில் இது போன்ற ஆயுதங்களை, விடுதலைப் புலிகள் மட்டுமே கையாண்டாதாக கூறப்படுவதுண்டு.

இலங்கையில் ஈழப் போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, விடுதலைப்புலிகளுக்கு சொந்தமான ஆயுதங்களை இலங்கை ராணும் கைப்பற்றியது.பின்னர், கைப்பற்றப்பட்ட ஆயுதங்களை இலங்கை ராணுவம் அங்குள் புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தினர்.

தொடர்ந்து அவற்றை புதுமாத்தளம் பகுதிக்கு மாற்றினர். இலங்கைக்கு வரும் சுற்றலாப் பயணிகளும், ஆராய்ச்சியாளர்கள், பத்திரிக்கையாளர்களும் தவறாமல் விடுதலைப்புலிகளின் ஆயுதங்களை பார்வையிட்டு சென்று வந்தனர்.

இந்நிலையில், தற்போது விடுதலைப்புலிகளின் நீர்மூழ்கி கப்பல் உட்பட போர் ஆயுதங்களை பொதுமக்கள் பார்வையிட முடியாது என்று இலங்கை ராணுவம் திடீரென்று தடை விதித்ததுள்ளது. மேலும், ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, யாரும் செல்லாதவாறு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் ஆயுதங்களைப் பார்வையிடும் உலக சுற்றலாப் பயணிகளும் சரி, சிங்கள சுற்றுலாப் பயணிகளும் சரி விடுதலைப் புலிளை நினைத்து பிரமிப்பதாகவும் அவை புலிகளின் புகழை பரப்பும் வகையில் அமைந்தமை காரணமாகவே இவ்வாறு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறித்த ஆயுதங்கள் காட்சிப்படுத்தப்பட்ட சூழல் மீள விடுதலைப் புலிகளின் தோற்றத்திற்கு வழி வகுக்கலாம் என்ற அச்சத்தில் இவ்வாறு தடைவிதிக்கப்பட்டதாகவும் இராணுவத்தரப்பை ஆதாரம் காட்டி ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.