விடுதலைப் புலிகளின் நீர்மூழ்கி கப்பலை பார்வையிட தடை விதித்த சிங்கள இராணுவம்

0

விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகிய நீர்மூழ்கி கப்பலை இனி பார்வையிட முடியாது என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

2009ம் ஆண்டிற்கு முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது சொந்த முயற்சியில் நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட போர் ஆயுதங்களை உருவாக்கியிருந்தனர்.

இறுதி யுத்தத்தின் போது குறித்த ஆயுதங்களை கைப்பற்றிய இராணுவத்தினர் அவற்றை புதுக்குடியிருப்பு, மந்துவில் பகுதியில் காட்சிப்படுத்தி பின்னர், புதுமாத்தளன் பகுதிக்கு இடம் மாற்றி இருந்தனர்.

இந்த நிலையில் குறித்த ஆயுதங்களை இலங்கையில் பல்வேறு இடங்களில் இருந்து செல்லும் பொதுமக்கள் பார்வையிட்டு வந்தனர். அண்மையில் சர்வதேச பெண் ஊடகவியலாளர் ஒருவர் குறித்த நீர்மூழ்கி கப்பலை ஆய்வு செய்திருந்தார்.

இந்த நிலையில் குறித்த நீர்மூழ்கி கப்பல் உள்ளிட்ட ஆயுதங்களை இனி பார்வையிட முடியாது என இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

மேலும் ஆயுதங்கள் வைக்கப்பட்டுள்ள வளாகத்திற்குள் யாரும் செல்லாதவாறு படையினர் தடை ஏற்படுத்தியுள்ளதுடன், அந்தப் பகுதியை தமது பூரணக்கட்டுப்பாட்டில் பாதுகாத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.