வவுனியாவில் ஆசிரியர் வடிவில் வாழும் ஏழை மாணவர்களின் கடவுள் ! ஆசிரிய தொழிலுக்கு ஓர் எடுத்துக்காட்டு
தான் பட்ட துயரை ஏழை மாணவர்கள் வாழ்வில் படக்கூடாது என்பதற்காக நெளுக்குளத்தை சுற்றியுள்ள எட்டு கிராமத்தில் உள்ள மாணவர்களுக்கு நன்மை அடையும் விதமாக தனியார் வகுப்பு நிலையம் ஒன்றை வைத்து நடத்தும் செல்வராசா சுரேஷ் என்ற இளம் கணித பாட ஆசிரியர் ஏழை மாணவர்கள் யாராவது பண வசதி இன்றி மாலை நேர வகுப்பிற்கு செல்லாமல் குடும்பநிலை காரணமாக வீட்டில் உள்ள வறிய மாணவர்களுக்கு தன்னுடைய கல்விநிலையத்தில் கட்டணம் இன்றி இலவசமாக கற்க முடியும் என்று அறிவித்துள்ளார் .
ஆசிரியரின் இந்த நல்லெண்ண அறிவிப்பு வவுனியாவில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் முன்னுதாரணமான செயற்பாடாக உள்ளது . அத்துடன் ஆசிரியர் கடவுள் போன்றவர் என்பதற்கும் ஏழைகளின் மீது தான் கொண்ட அக்கறையினையும் எடுத்துக் காட்டாக இது அமைந்துள்ளது
எனவே நெளுக்குளம் பகுதியை சுற்றியுள்ள ஏழை மாணவர்கள் “லயா” கல்லூரிக்கு சென்று வாழ்வில் இதனை ஒரு சந்தர்ப்பமாக பயன்படுத்திக் கொள்ளவும்.
கல்வித்துறையில் சாதித்துவருவதுடன் ஏழை மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றி வரும் இளம் ஆசிரியர் சுரேஸ் அவர்களுக்கு ஈழம் நியூஸ் இணைய குழுமம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதுடன் அவரது சேவையை மனதார பாராட்டுகின்றது .