1757 கோடி ரூபாயில் கட்டிய உலகக்கோப்பை மைதானத்தை சேதப்படுத்திய ஒரேநாள் மழை

0

ரஷியாவில் பெய்த ஒரே நாள் கனமழையால் உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்காக கட்டப்பட்ட மைதானம் சேதமடைந்தது. #WorldCup2018 #Volgograd

1757 கோடி ரூபாயில் கட்டிய உலகக்கோப்பை மைதானத்தை சேதப்படுத்திய ஒரேநாள் மழை
உலகக்கோப்பை கால்பந்து தொடர் ரஷியாவில் கடந்த மாதம் 14-ந்தேதி முதல் நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. உலகக்கோப்பை கால்பந்து தொடருக்காக ரஷியாவில் கோடிக்கணக்காக பணத்தில் பல்வேறு மைதானங்கள் கட்டப்பட்டன.

அதில் ஒன்று தெற்குப் பகுதியில் அமைந்துள்ள வோல்கோகிராட் மைதானமும் ஒன்று. இந்த மைதானம் சுமார் 1757 கோடி ரூபாயில் கட்டப்பட்டதாகும். இங்கிலாந்து – ஜப்பான் இடையிலான நாக்அவுட் போட்டி உள்பட 8 ஆட்டங்கள் இந்த மைதானத்தில் நடைபெற்றது.

நேற்றுமுன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) மாஸ்கோவில் உள்ள மைதானத்தில் இறுதிப்போட்டி நடைபெற்றது. போட்டி முடியும் தருவாயில் கனமழை பெய்தது. அப்போது வோல்கோகிராட்டிலும் கனமழை பெய்தது.

அதுவும் வரலாறு காணாத மழையாக கொட்டி தீர்த்தது. இந்த மைதானம் அருகே ஏரிக்கரை அமைந்துள்ளது. இந்த ஏரியில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் மைதானத்தின் வெளிப்புறத்தில் உள்ள கட்டுமானத்தை அரித்துச் சென்றது. இதனால் மைதானத்தின் வெளிப்பபுறத்தில் பல மீட்டர் தொலைவிற்கு பெரிய பள்ளம் விழுந்தது. அதில் சேறு குவிந்துள்ளது.

பலகோடி ரூபாய் செலவிட்டு கட்டப்பட்ட மைதானம் ஒரு மழைக்கே தாங்காமல் போனது அங்குள்ள மக்களை வேதனையடையச் செய்துள்ளது. ஏற்கனவே உலகக்கோப்பை தொடருக்காக கட்டப்பட்டுள்ள மைதானங்களை ரஷியா எதற்காக பயன்படுத்தப் போகிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.