இலங்கை அம்பாறை மாவட்டத்தில் உலக சுற்றுலாவிற்கு பிரபலம் பெற்ற இடமாக விளங்கும் அருகம்மை என்ற இடம் அனைவரும் அறிந்ததே.இந்த பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகளவில் வந்து செல்வதுண்டு. இதற்கேற்றார்போல அருகம்மை கடற்பரப்பின் பல்வேறு பகுதிகளில் அலைசறுக்கு விளையாட்டு போட்டிகள் இடம்பெறுகின்றன.
அதன்பின்னரே சில யோசிக்க இயலாத அவலங்கள் நடைபெறுவதாக தகவல் கிடைத்துள்ளது.அதாவது, சூரியன் அஸ்தமிக்கும் சமயத்தில் சிலர் வெளிநாட்டு கலாச்சார ஆடைகளை அணிந்தவாறு கடற்கரைக்கு வருகை தந்து பீச் பார்ட்டி எனப்படும் அந்த களியாட்ட நிகழ்வில் கலந்து கொள்கின்றனர். அந்த களியாட்டத்தில்.. பல இளைஞர்களும், இளம்பெண்களும் அரை போதையில் கலந்துகொண்டு தள்ளாடியவாறு நடனமாடுகின்றனர்.
இது ஒருபுறமிருக்க, இதுவரை இலங்கையில் அறிமுகம் செய்யப்படாத பல பெயர்களை கொண்ட போதை பொருள்களை அந்த அரைபோதையில் காணப்படும் இளைஞர் இளம்பெண்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. அயிஸ் என்ற பெயர் கொண்ட போதை பொருளே இங்கு அதிகம் விற்பனை செய்யப்படுகின்றன. அந்த போதை பொருள் 1 கிராமின் விலை 60 ஆயிரம் ரூபாவாகும். அதில் சிறுதுளி பாவிப்பதற்கு 15 ஆயிரம் ரூபா கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
அது மாத்திரமின்றி இதுவரை கேள்விப்பட்டிராத N D M A என பெயர் கொண்ட இந்த போதை பொருள் ஒரு கிராம் 19 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுவதாகவும், DMT ஒரு கிராம் 28 ஆயிரம் ரூபாய், ரோஸ் நிற குளிசை 12 ஆயிரம் ரூபா, குரங்கு முகம் பதித்துள்ள நீல நிற குளிசை 15 ஆயிரம் ரூபா, கஞ்சா மலர் அடையாளம் பதித்துள்ள குளிசை 19 ஆயிரம், ஹேப்பி வாட்டர் ஒரு சிறிய குப்பியின் விலை 35 ஆயிரம் ரூபா மற்றும் இன்னும் பல வகையான போதை பொருட்கள் பல்லாயிரம் ரூபா ஆகிய விலைகளில் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த போதை பொருள் பயன்படுத்தினால் சில மணி நேரத்திலிருந்து சில நாட்கள் வரை போதையிலேயே இருப்பதாகவும், அதிலும் சிலர் போதையிலேயே மரணிக்க வேண்டிய சூழ்நிலை அதிகம் இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
அத்துடன் குறித்த பொருள்கள் இலகுவாக அருகம்மை கடற்கரை பீச் பகுதியில் கிடைப்பதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் அதிகரித்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் குறித்த போதை பொருள் விற்பனை செய்யப்படுவதனால் அப்பகுதியில் வசிப்பவர்களின் குடும்பங்களிலுள்ள பள்ளி மாணவர்கள் உட்பட பல இளம்பெண்களும் வெகுவாக போதை பொருட்களுக்கு அடிமையாவதாகவும் தெரிவிக்கின்றனர்.
மேலும், அதனை பெற்றுக்கொள்ள கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களிலும் இளைஞர்களும், இளம்பெண்களும் ஈடுபடுவதோடு போதையில் வயது வித்தியாசமின்றி பெண்களை இளைஞர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதுமட்டுமல்லாது போதையான பெண்களை இளைஞர்கள் கூட்டு பாலியலுக்கு உட்படுத்தியும் வருகின்றனர்.
இது குறித்து அம்பாறை பகுதி மக்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.