“ஆவாக்கள் பற்றி இரகசியமாக தகவல் தெரிவிக்கட்டாம்!

0

அதிக வன்முறை சம்பங்கள் இடம்பெறும் பிரதேசங்களின் தகவல்களை இரகசிய தொலைபேசி ஊடாகவும் சிரேஸ்ட பிரதிக்காவல்துறை மாஅதிபரிடம் நேரடியாகவும் தெரிவிக்குமாறு வடமாகாண பிரதிக்காவல்துறை மாஅதிபர் றொசான் பெர்ணான்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். தலைமைக் நிலையத்தில் இன்று இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போது இதனைக்குறிப்பிட்டுள்ள அவர் தற்போது யாழில் வன்முறைச் சம்பவங்கள் ஓரளவிற்கு குறைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

வன்முறைச் சம்பவங்கள் மற்றும் ஆவா குழுவினரை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்றையதினம் யாழ்ப்பாணம், கோப்பாய் சுன்னாகம் காவற்துறைப் பரிவுக்குட்பட்ட பிரதேசங்களில், காவல்துறையினரின் அறிவுறுத்தல்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்கள் ஐயாயிரம் விநியோகப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் மானிப்பாய் , வட்டுக்கோட்டைப் பகுதிகிளலும் மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில், துண்டுப்பிரசுரம், விநியோகம் செய்யப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுளளார்.

மேலும் வன்முறைச் சம்பவங்களைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் பொதுமக்கள் இவ்வாறு தம்துடன் இணைந்து செயற்படும் போது வன்முறைச்சம்பவங்களை இலகுவாக கட்டுப்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, வன்முறைச் சம்பவங்கள், மற்றும் ஆவா குழுவினரைக் கட்டுப்படுத்த தமக்கு கிடைக்கும் தகவல்களை பொது மக்கள் தொலைபேசி மூலமும், வட மாகாண பிரதிக்காவல்துறை அதிபரின் முகவரிக்கும் தனிப்பட்ட முறையில், தெரிவிக்குமாறும் இரகசியமாக தகவல்களை வழங்கினால், வன்முறையாளர்களைக் கட்டுப்படுத்த இலகுவாக இருக்குமெனவும் வடமாகாண பிரதிக்காவல்துறை மாஅதிபர் கேட்டுக்கொண்டுள்ளார்

Leave A Reply

Your email address will not be published.