உயர்தர பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவி கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் ! முல்லைத்தீவில் நடந்த கொடுமை
முல்லைத்தீவில் பாடசாலை மாணவியொருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார் .முல்லைத்தீவில் உள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் உயர்தர வகுப்பினை சேர்ந்த மாணவியே இவ்வாறு கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் .
நேற்று முன்தினம் குறித்த மாணவி கபொத உயர்தர பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த போது இளைஞர் ஒருவர் மாணவியை வாகனம் ஒன்றில் கடத்தி சென்று பளை பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து விட்டு மாணவியை இன்று உடையார் கட்டு பகுதியில் இறக்கி விட்டு சென்றுள்ளார் .
தனக்கு நேர்ந்த கொடுமையை மாணவி பெற்றோருக்கு தெரிவித்துள்ளார் . தமது மகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் மாணவியின் பெற்றோர் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர் .
மாணவியின் பெற்றோர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முடுக்கி விட்ட பொலிஸார் மாணவியிடம் இருந்து பெற்றுக்கொண்ட தகவலின் அடிப்படையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையை பொறுப்பதிகாரி தலைமையில் பளை பிரதசத்துக்கு சென்று மாணவியின் கடத்தலுக்கு உதவிய நபர் ஒருவரை நேற்று பிற்பகல் கைது செய்தனர் .
இதனை தொடர்ந்து நேற்று இரவு பளை பிரதேசத்துக்கு சென்ற புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர் மாணவியை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞரை மடக்கி பிடித்துள்ளனர் .பளை பகுதியை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் .
மாணவியை கடத்தி சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர் மற்றும் மாணவியை கடத்துவதற்கு உதவி செய்த நபர் இவர்கள் இருவரும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளார்கள் .