எனது ஆட்சியில் வேலை நிறுத்தங்கள் இல்லை! மகிந்த இறுமாப்பு!!

0

அரசாங்கம் தொழிற்சங்கவாதிகளை தாக்கி, தொழிற்சங்கங்களை அடக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனவே நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க தொழிற்சங்கங்கள் தமது தரப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று தொழிற்சங்கங்களின் தலைவர்களுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

எமது அரசாங்கம் ஆட்சியில் இருக்கும் போது அனைத்து வரவு செலவுத் திட்டங்களுக்கும் முன்னர், சகல தொழிற்சங்கங்களுடனும் நாங்கள் பேச்சுவார்த்தைகளை நடத்தினோம்.

அப்போது, நீங்கள் எங்களை திட்டிய சந்தர்ப்பங்கள் உள்ளன. சத்தமிட்ட சந்தர்ப்பங்கள் உள்ளன. அவற்றுக்கு நாங்கள் பதில் வழங்கி, பிரச்சினைகளை தீர்த்தோம்.

அன்று கேட்பதற்கு யாராவது இருந்தனர். பிரச்சினைகள் இருந்தால், அது ஜனாதிபதிக்கும் வருவதுண்டு. இதன் காரணமாக எமது ஆட்சிக்காலத்தில் வேலை நிறுத்தங்கள் நடைபெற்றதில்லை.

எமக்கு எந்த சந்தர்ப்பத்திலும் எவருடனும் பிரச்சினைகள் இருந்ததில்லை. அனைத்து சந்தர்ப்பங்களிலும் பிரச்சினைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக்கொள்ள முடிந்தது என தெரிவித்துள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.