ஒரு பிசாசை அடித்­துக் கலைப்­ப­தற்­காக ஒரு பேயை ஆத­ரித்­தோம்; சிவமோகன் எம்பி

0

கடந்­த­கால ஆட்­சியை மாற்றி புதிய அர­சைக் கொண்டு வந்­தது அவ­ர்க­ளி­டம் பிச்சை எடுப்­ப­தற்கு அல்ல. எமது உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்கு அதற்க்காகவே ஒரு பிசாசை அடித்­துக் கலைப்­ப­தற்­காக ஒரு பேயை ஆத­ரித்­தோம். என வன்னி நாடா­ளு­மன்ற உறு­பப்­பி­னர் வைத்தியக்கலாநிதி சி. சிவ­மோ­கன் தெரி­வித்­தார்.

முல்­லைத்­தீவு ஒட்­டு­சுட்டான் பிர­தே­சத்­திற்கு உட்­பட்ட கரிப்­பட்­ட­மு­றிப்பு புதி­ய­ந­கர் பகு­தி­யில் நேற்று இடம்­பெற்ற நூலகத் திறப்பு விழா­வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது: எல்­லோ­ரி­ட­மும் ஒரு கேள்வி இருக்­கின்­றது இன்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு என்ன செய்­தது என்று. இது எம்­மக்­க­ளி­டம் விதைக்­கப்­ப­டும் நஞ்­சு­விதை. எமது மக்­கள் ஒதுக்­கப்­பட்டு செட்­டி­கு­ளம் முகாம்­க­ளில் இலை­யான்­க­ளுக்­குள் அடைக்­கப்­பட்­டார்­கள். என் கண்­முன்னே எத்­த­னையோ பேர் உயி­ரி­ழந்­துள்­ளார்­கள் அவர்­களை வெளி­யில் மீட்­டெ­டுக்க தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு முன்­வந்­தது.

விடு­த­லைப்­பு­லி­க­ளின் காலத்­தில் இந்த மண் அவர்­க­ளின் கைக­ளில் இருந்த பொழுது எந்த வச­தி­யும் இல்­லாது கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்­டும் மக்­கள் பணம் இன்றி இருக்­க­வில்லை. எப்­படி இருந்­தா­லும் வாழ­மு­டி­யும் என்­பதை வாழ்ந்து காட்­டி­ய­வர்­கள் விடு­த­லைப்­பு­லி­கள். அந்த மண்­ணில் வாழ்ந்­த­வர்­கள் நாங்­கள். விடு­த­லைப்­பு­லி­க­ளின் முடி­வுக்­குப் பின்­னர் மக்­கள் பிரச்­சி­னையை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தங்­கள் கையில் எடுத்­தது.

இந்­தி­யா­வு­டன் சண்­டை­பி­டித்து கலந்­து­ரை­யாடி வடக்கு கிழக்கு மக்­க­ளுக்­காக ஜம்­ப­தா­யி­ரம் வீட்­டுத்­திட்­டங்­கள் கொண்­டு­வந்­த­தும் கூட்­ட­மைப்பே. இதனை நான் ஏன் சொல்­கின்­றேன் என்­றால் கேள்வி கேட்­ப­வர்­க­ளுக்கு நாங்­கள் சொல்­ல­வேண்­டிய விட­யம். வெள்­ளை­ வேன் கடத்­தல்­கள் ராஜ­பக்ச ஆட்­சிக் காலத்­தில் கண்­ட­படி இடம்­பெற்­றது.

பிடித்து சுட்­டார்­கள் விசா­ரணை இன்­றிச் சித்­தி­ரை­வதை செய்­தார்­கள். புல­னாய்­வா­ளர்­கள் என்ற போர்­வை­யில் சிங்­கள இளை­ஞர்­களை இறக்­கி­விட்டு ஆட்சி செய்­த­வர்­கள். அவர்­க­ளின் அரா­யக ஆட்­சியை ஒழித்­தது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு. நாம் ஒன்­றி­ணைந்­தோம் அவர்­க­ளைத் தூக்கி எறிந்­தோம்.

ஒட்டு மொத்த தமிழ்­மக்­கள் போட்ட வாக்­கு­க­ளும் நாங்­கள் நினைத்த ஒரு­வ­ருக்கு வீழ்ந்தது. அதற்­காக அவர்­கள் சிறந்­த­வர்­கள் என்று சொல்­ல­வில்லை ஒரு பிசாசை அடித்­துக் கலைப்­ப­தற்­காக ஒரு பேயை ஆத­ரித்­தோம் அவ்­வ­ள­வு­தான்.

இன்று தமிழ் மக்­க­ளுக்­கான உரி­மை­களை நிலை­நாட்டி இருக்­கின்­றோம் இப்­போது எவ­ரை­யும் கைது­செய்ய முடி­யாது கைது­செய்­வ­தாக இருந்­தால் அதன் ஆணை வழங்­கப்­ப­ட­வேண்­டும். குடும்­பத்­துக்கு தெரி­யப்­ப­டுத்­த­வேண்­டும். எதற்­கா­கக் கைது. எங்கு கொண்­டு­செல்­லப்­ப­டு­கி­றோம் என்று எழுத்­து­மூ­லம் தந்த பின்­னர்­தான் இந்த அரசு யாரை­யும் கைது­செய்ய முடி­யும்.

இந்த அரசை கொண்­டு­வந்­தது அவர்­க­ளி­டம் பிச்சை எடுப்­ப­தற்கு அல்ல எங்­க­ளின் உரி­மை­களை வென்­றெ­டுப்­ப­தற்கு. உரி­மை­களை வென்­றெ­டுக்­கப் பல வழி­கள் உண்டு ஆனால் மக்­க­ளின் பாது­காப்­புக்­காக இந்த அரசை மாற்றி இருக்­கின்­றோம் என்­றார்.

Leave A Reply

Your email address will not be published.