கடற்கரும்புலிகள் மேஜர் புகழரசன், கப்டன் மணியரசன்- 25ம் ஆண்டு வீரவணக்க நாள்!

0

யாழ். மாவட்டம் பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து 29.08.1993 அன்று சிறிலங்கா கடற்படையின் அதிவேக சுப்பர் டோறா பீரங்கிப் படகு மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட கடற்கரும்புலி மேஜர் புகழரசன் / புவீந்திரன், கடற்கரும்புலி கப்டன் மணியரசன் ஆகிய கடற்கரும்புலி மாவீரர்களின் 25 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

20MM ஒலிகன் கனொன்(20MM Oerlikon cannon) கடற்புலிகளால் கைப்பற்றப்பட்ட முதல் கனொன்.திருகோணமலையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த, சிறிலங்கா கடற்படையின் சுப்பர் டோறா பீரங்கிக் கலத்தினை, பருத்தித்துறைக் கடற்பரப்பில் வைத்து 29.08.1993 அன்று மூழ்கடித்து, வீரகாவியமான கடற் கரும்புலிகள் மேஜர் புகழரசன்(புவீந்திரன்) மற்றும் கப்டன் மணியரசன் ஆகிய இரு மாவீரர்களின் தியாகத்தாள், எந்தவித சேதமும் இல்லாது, கடற்புலிகளின் கைகளில் கிடைத்த முதல் 20MM கனொன் இது தான். அதை தலைவர் பார்வையிடும் போதே இந்தப்படம் எடுக்கப்பட்டது.

20MM கனொன் ஆயுதத்தை 1940 ஆண்டு சுவிஸ் நாட்டை சேர்ந்த ரெண்கொல்ட் பெக்கர் (Reinhold Becker) என்பவர் உருவாக்கினார். இந்த ஆயுதத்தின் சிறந்த பயன்பாடு காரணமாக, சுவிஸ் அரசிடமிருந்து காப்புரிமையை பெற்று பல முன்னணி நாடுகள், இதன் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக்கொண்டு பலவிதமாக இதை உருவாக்கி பாவிக்கின்றன.இதன் சிறப்பு, தரை, கடல்,வான் மூன்றிலும் பாவிக்க இலகுவானது. அத்தோடு இதிலிருந்து வெளியேறும் குண்டு, மோதுமிடத்தில் வெடிக்கும் தன்மை கொண்டதால், அந்த இடத்தில் பெரும் சேதத்தை உண்டாக்கும். இந்த ரவையில் உயர் சக்தி வெடிமருந்துள்ளமையால், ஒரு கைக்குண்டின் சக்திக்கு நிகரான சேதத்தை உண்டாக்கும்.அன்று கடற்புலிகளால் கைப்பற்றப்பட்டது பிரிட்டிஸ் அரசால் உருவாக்கப்பட்டது.புலிகளின் கைகளில் முதல் முதலில் 1991ம் ஆண்டு 23MM கனொன் ஆயுதம் கடலால் கொண்டு வரப்பட்டிருந்தது. அதன் பாவனைதிறனும் கணக்கில் சேர்க்கப்பட்டே, ஆணையிறவின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.இதன் ஆரம்ப சூட்டாலனாக லெப்.கேணல். மகேந்தியண்ணை இருந்தார். அதன் பின்னரான காலங்களில் 14.5MM, 23MM,37MM போன்ற கனொன் ஆயுதங்கள் (இவை ரசியாவை தாயகமாக கொண்ட ஆயுதங்கள்) பெருமளவில் கொண்டு வரப்பட்டிருந்தது. அந்த ஆயுதங்களை புலிகள் தரை, வான், கடல் மூன்றிலும் உபயோகித்தார்கள்.!

வெற்றிக்கு வித்திட்டு கடலன்னை மடியில் உறங்கும் உயிராயுதங்கள்…தாயக விடுதலை வேள்வி தன்னில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை மக்களைக் காத்த மாவீரர்களுக்கு எமது வீரவணக்கங்கள்.

Leave A Reply

Your email address will not be published.