கட்டுநாயக்க விமான நிலையத்தில் புயலாக மாறிய பெண்! அதிர்ச்சி காணொளி இணைப்பு

0

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டு தம்பதியினர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு அதிர்ச்சி காணொளி வெளியாகி உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் 5 பேரை குவைத் நாட்டை சேர்ந்த தம்பதியினர் தாக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட குறித்த இருவரும் வழக்கு விசாரணைகள் நிறைவடையும் வரை இந்நாட்டில் இருந்து வௌியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தம்பதியினர் அழைத்து வந்த நாயை சுங்க அதிகாரிகள் தடுத்துள்ள நிலையில் , இதன்போது கோபமுற்ற தம்பதியினர் குறித்த சுங்க அதிகாரிகளை தாக்கியுள்ளனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கனவே காணொளி ஒன்று வெளியாகி இருந்தது. எனினும் தற்போது குறித்த பெண் ஆக்ரோஷமாக அதிகாரிகளை தாக்க முயற்சித்த காணொளி வெளியாகி உள்ளது.

Leave A Reply

Your email address will not be published.