தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியை மெரீனாவில் புதைக்க இடமளிக்க மாட்டோம் என்று இளைஞர்கள் சர்ச்சை முழக்கம் இட்டுள்ளனர். அங்கே அறிஞர் அண்ணா, எம். ஜி. ஆர், ஜெயலலிதா சமாதிகள் உள்ளன. அதன் அருகே கருணாநிதியை புதைப்பது தொடர்பில் மு.க. ஸ்டாலின் தமிழக முதல்வருடன் பேசியுள்ளார்.
இந்த நிலையில் மெரீனாவில் சமாதிகள் அமைக்க வேண்டாம் என வழக்கு தொடுத்தவரை அவ் வழக்கை வபஸ் பெற வைக்கும் செயற்பாடுகளில் தி.மு.க ஈடுபடுகிறது. அதன் பின்னர் கருணாநிதி மரணச் செய்தி வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வராக இருந்த காமராஜரை மெரீனாவில் புதைக்க கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது அனுமதி மறுக்கப்பட்டு முன்னாள் முதல்வருக்கெல்லாம் அங்கே இடமில்லை என்று நக்கலாக பதில் சொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.