கிளிநொச்சியில் இறந்த சிறுவனை அடக்கம் செய்ய சவப்பெட்டி வாங்க பணம் இல்லாமல் பலகை மூலம் பெட்டி தயாரிப்பு !மனசாட்சியை உலுக்கும் சம்பவம்
கிளிநொச்சி முழங்காவில் அன்புபுரம் பிரதேசத்தில் 13 வயது சிறுவன் தனது சகோதரிகளுடன் விளையாடிக்கொண்டிருந்த போது கயிறு இறுகி பலியான துயர சம்பவம் நேற்று இடம்பெற்றது .
மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த கயிறு கழுத்தில் இறுகியதால் மரணித்த அந்த சிறுவனுக்கு, பிரேதப்பெட்டியை வாங்கக்கூட முடியாத நிலை அவனின் குடும்பத்துக்கு.
வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருக்கும் சிறுவனின் குடும்பம் சவப்பெட்டி வாங்க காசு இல்லாத காரணத்தினால் ஊர்மக்கள் சேர்ந்து பலகைகளை சேர்த்து பிரேதப்பெட்டியை தயாரித்திருக்கிறார்கள்.
வறுமையிலும், உறவுகளின் தேடல்களிலும், போராட்டங்களிலும் ஒரு சந்ததியே மறைந்துவிட்ட பின்னர், எங்கள் பிரதிநிதிகள் என்னத்தை எங்களுக்கு கொடுக்கப்போகிறார்கள்?
விடுதலை புலிகளின் பணத்தினை கொள்ளையடித்தவர்கள் 2009 இன் பின்னர் ஒரே நாளில் பணக்காரர்கள் ஆகி சொகுசு வாழ்க்கை அனுபவித்து வரும் நிலையில் வன்னியில் இன்று வரை மக்கள் வறுமையின் கோரப்பிடியில் சிக்கியிருப்பது மனித மனசாட்சியை நிச்சயம் உலுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை .