கைது செய்யப்பட்ட வாள்வெட்டுக் குழுவில் நாளை A/L பரீட்சை எழுதுபவர்களும் உள்ளடக்கமாம்!

0

மானிப்­பாய் பொலி­ஸார் சிவில் உடை­யில் மறைந்­தி­ருந்து எட்­டுப் பேரைக் கைது செய்­தார்­கள். கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் வாள்­வெட்­டுக் கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும், அவர்­க­ளி­ட­மி­ருந்து 3 வாள்­கள், இரண்டு உந்­து­ரு­ளி­க­ளைக் கைப்­பற்­றி­யுள்­ள­தா­க­வும் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

இவர்­கள் அனை­வ­ரும் தென்­ம­ராட்­சி­யின் பல்­வேறு பகு­தி­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் என்­றும், கைது செய்­யப்­பட்­ட­வர்­க­ளில் 4 பேர் கல்­விப் பொதுத்­த­ரா­தர உயர்­த­ரப் பரீட்­சைக்கு (ஏ.எல்) தோற்­ற­வுள்­ள­வர்­கள் என்­றும் மானிப்­பாய் பொலி­ஸார் குறிப்­பிட்­டார்­கள்.

யாழ்ப்­பாண மாவட்­டத்­தில் கடந்த இரண்டு வாரங்­க­ளாக வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள், வீடு­கள் மீதான தாக்­கு­தல்­கள், கொள்­ளைச் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­தி­ருந்­தன. தென்­ம­ராட்­சிப் பிர­தே­சத்­தி­லும் இந்­தத் தாக்­கு­தல்­கள் நடை­பெற்­றி­ருந்­தன.

தென்­ம­ராட்­சி­யின் கெற்­பே­லிப் பகு­தி­யில் கடந்த வியா­ழக் கிழமை மகி­ழூர்ந்­தில் சென்று வாள்­வெட்­டுத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டி­ருந்­தது. அவர்­கள் தப்­பிச் செல்­லும்­போது மகி­ழூர்ந்து பழு­த­டைந்­தது. பொலி­ஸார் அதன் சார­தி­யைக் கைது செய்­தி­ருந்­த­னர்.

இந்த நிலை­யில் மானிப்­பாய் பொலி­ஸார் சாவ­கச்­சே­ரிக்கு நேற்­றுச் சிவில் உடை­யில் வந்­தார்­கள். வாள்­வெட்­டுக் குழுக்­க­ளு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்ற சந்­தே­கத்­தில் மூன்று பேரைக் கைது செய்­தார்­கள். அவர்­க­ளின் அலை­பே­சி­யி­லி­ருந்து மேலும் சில­ருக்கு கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் ஊடாக அழைப்பு எடுக்­கப்­பட்­டது.

விபத்­தில் காய­ம­டைந்து சாவ­கச்­சேரி வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தாக அலை­பேசி அழைப்பு ஊடாக, கைதா­ன­வர்­க­ளின் நண்­பர்­க­ளுக்­குத் தெரி­விக்­கப்­பட்­டது. வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளைப் பார்ப்­ப­தற்கு நண்­பர்­கள் வந்­துள்­ளார்­கள்.

சிவில் உடை­யில் அங்கு மறைந்­தி­ருந்த பொலி­ஸார், அவர்­க­ளைக் கைது செய்­தார்­கள். அவர்­க­ளும் வாள்­வெட்­டுக் கும்­ப­லு­டன் தொடர்­பு­டை­ய­வர்­கள் என்று பொலி­ஸார் தெரி­வித்­தார்­கள்.

கைது செய்­யப்­பட்­ட­வர்­களை சாவ­கச்­சேரி வைத்­தி­ய­சா­லை­யில் பாது­காப்பு அலு­வ­லர் அறை­யில் தங்க வைத்­தி­ருந்த பொலி­ஸார், மானிப்­பாய் பொலிஸ் வாக­னம் வந்­த­தும் அதில் அவர்­களை ஏற்­றிச் சென்­றார்­கள். கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் சாவ­கச்­சேரி, சர­சாலை, மற­வன்­புலோ பிர­தே­சங்­க­ளைச் சேர்ந்­த­வர்­கள் என்று முதல் கட்ட விசா­ர­ணை­க­ளில் தெரி­ய­வந்­துள்­ளது.

Leave A Reply

Your email address will not be published.