தான் பெற்றெடுத்த பிள்ளைகளை பற்றி தேசியத்தலைவர் பிரபாகரன் கூறிய கருத்து ! மனுநீநி சோழனை விஞ்சிய தலைவன்
தனது பிள்ளைகள் மூவரையும் பற்றி தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் தெரிவித்த கருத்து…………………….
“சார்லஸ் சாது அவர் தளபதிகளின் செல்லம்.அப்பா,மாமா என்று தளபதிகளுடன் தான் அவருக்கு அதிகம் ஒட்டு.
தகப்பன்மாருக்கு பெண் பிள்ளையளோடதானே பாசம் துவராகா அப்பா,அப்பா என்று சுற்றி சுற்றி வருவா. மனசுக்கு இதமாக இருக்கும்.ஆனால் பாலசந்திரன்தான் என்னைபோல சண்டைகாரனா வருவார் போல தெரியுது”
என்று சொல்லி சிரித்த அதே வாயால் என்னுடைய பிள்ளைகளையும் நாட்டுக்காக கொடுத்திட்டேன்பா என்றும் சொன்னார்.
ஒரு பசுவின் கன்றுக்காக தன் மகனையே இழக்க துணிந்த மனுநீநி சோழனை கண்டதுமில்லை, கதைத்ததுமில்லை. அந்த மனுநீநி சோழன்கூட தன் ஒரு மகனைதான் இழக்க துணிந்தான்.ஆனால் எங்கள் ஈழ மகாராஜனோஅந்த கணக்கையும் விஞ்சி நீதிநெறி பிறழாமல் அரசாள்வதில் தனக்கு நிகர் புறநானூற்று காலத்திலேகூட எவருமில்லை என நிரூபீத்து காட்டியவர்.
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனை
புலிவீரனென்று கேட்ட தந்தை”
இளைய சமுதாய பிள்ளைகளே சினிமாவில் நடிக்கும் கூத்தாடிகளையும்,தமிழ் மக்களின் குருதியை குடித்து கொழுத்து போயிருக்கும் தகுதியேஇல்லாத அரசியல் வாதிகளையும் தலைவர் என்றழைப்பதை நிறுத்துங்கள்.
தமிழுலகே என் தமிழ்சாதியே இப்படியோர் அப்பழுக்கற்ற தலைவனை உலகில் எங்கேனும்
பார்த்ததுண்டா?
படித்ததுண்டா?
கேட்டதுண்டா?
கேள்வி பட்டதுண்டா?
கரிகாலன் என்பது வார்த்தையல்ல வரம்.
பிரபாகரன் என்பது பெயரல்ல பிரபஞ்சம்.
#தமிழரின்_தாகம்_தமிழீழ_தாயகம்