நான் மது குடிப்பதை நிறுத்தி விட்டேன் என்று நடிகை மனிஷா கொய்ராலா கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் பம்பாய், முதல்வன், பாபா, மாப்பிள்ளை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து, சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். அங்கு சிகிச்சை பெற்று நன்கு குணமடைந்த பின்பு மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில், சில மாதங்களுக்கு நடிப்பிலிருந்து விலகி இருக்க முடிவு செய்திருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில், கடந்த 16ம் தேதி எனது 48வது பிறந்தநாளாஇ கொண்டாடினேன். அந்த பிறந்தநாள் நிகழ்ச்சிக்கு எனது நண்பர்கள்இ சினிமா பிரபலங்கள்இ இயக்குனர்கள் என்று பலரும் நேரில் வந்து வாழ்த்து தெரிவித்தார்கள்.
அப்போது தான் என் மீது சினிமா பிரபலங்கள் இன்னமும் பிரியமும்இ மரியாதையும் வைத்திருப்பதை நான் உணர்ந்தேன். கடைசியாக நாம் நல்ல பெயருடன் வாழ்வது அவசியம். கெட்ட பெயரை எளிதில் வாங்கிவிடலாம். ஆனால்இ எனது பிறந்தநாளுக்கு வந்து அனைவரும் என்னை வாழ்த்தும் போது தான் என்னை அனைவரும் மதிப்பதை உணர முடிந்தது. அப்போது நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தேன். நான் மது அருந்துவதை முற்றிலும் நிறுத்திவிட்டேன்.
எனது சினிமா வாழ்க்கைஇ அனுபவம்இ உடல்நலம் மற்று உடற்தகுதி பற்றி 2 புத்தகங்கள் எழுதுகிறேன். வரும் டிசம்பர் மாதம் அந்த இரு புத்தகங்களையும் வெளியிடயிருக்கிறேன். தற்போதுஇ கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறேன். அப்படி கதை கிடைக்காவிட்டால்இ நான் நடிக்காமல் கூடா இருந்து விடுவேன் என்று அவர் கூறியுள்ளார்.