பிரபாகரனின் சீருடையை அகற்றி அரைத் துணியைப் போட உத்தரவிட்டாராம் சரத் பொன்சேகா!

0

தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் சடலத்தில் இருந்து, புலிகளின் சீருடையை அகற்றுமாறு, சிறிலங்கா இராணுவத் தளபதியாக இருந்த பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவே உத்தரவிட்டாராம் என்று ஒரு பொய்யை மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே அவிழ்த்து விட்டுள்ளார்.

இறுதிக்கட்டப் போரில் சிறிலங்கா இராணுவ அணிகளை வழிநடத்திய தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் சாஜி கல்லகே சிறிலங்கா இராணுவத்தில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்றுள்ளார். இவர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள செவ்வியிலேயே மேற்படி தகவலை வெளியிட்டுள்ளார் என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய தகவல்கள் இவையாகும்.

”2009 மே 19ஆம் நாள், கடுமையான துப்பாக்கிச் சண்டைக்குப் பின்னர், பிரபாகரனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.பிரபாகரனின் உடல் புலிகளின் சீருடையில் இருக்கும் முதலாவது ஒளிப்படம் பகிரங்கப்படுத்தப்பட்டது.அதற்கு சரத் பொன்சேகா மூத்த இராணுவ அதிகாரிகளைத் திட்டி, சீருடையை அகற்றச் சொன்னார்.சரத் பொன்சேகா கோபமாக இருந்தார். பிரபாகரனின் உடலில், அரைத் துணியைப் போடுமாறு உத்தரவிட்டார்.

அதன் பின்னர், இராணுவ முகாம் ஒன்றுக்கு தலைவர் பிரபாகரனின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, இடுப்பில் அரைத்துணி அணியப்பட்டு, மீண்டும் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கே கொண்டு வரப்பட்டது. பிரபாகரனின் உடலை கருணாவும், தயா மாஸ்டரும் அடையாளம் காட்டிய போது, இடுப்பில் மாத்திரம் துணி போர்த்தப்பட்டிருந்தது.” என்றும் அவர் தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் குறிப்பிடுகிறது.

தலைவர் பிரபாகரன் உயிரிழந்துள்ளதை உறுதிப்படுத்தி இந்தியாவுக்கு மரணச்சான்றிதழ் கொடுக்க இலங்கை தயங்கி வருகின்றது. அவர் உயிருடன் இருப்பதாகவும் இறுதி யுத்தத்தின்போது பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.